வெட்கம் என்பது
எனக்கும் உண்டு தான்..!

என் வயிறு தான்
அதை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது..
உலகமும் ஏற்காததை போல்..!

மூக்கைத் துளைக்கும்
வாசனை மிக்க விருந்துகளையா
கேட்கிறேன்..??

ஓரிரு ரொட்டித் துண்டுகள்
இருந்தாலும் போதும்
என் விருந்துக்கு..!

பிச்சை கேட்கவும்
தன்மானம் அடகு போக
மறுக்கிறது..!

நான் என்ன செய்ய
அச்சமும் நாணமும்
பிறவி தந்த
பரிசுகள் தானே..

நல்ல குலத்தில் வேறு
பிறந்து விட்டேன்
அதனால்
திருட்டுப் புத்தியும்
இதுவரை தள்ளியே உள்ளது..!

நாவறண்டு தொண்டை
நிலங்கள் வரட்சி
காணும் வரையில்
பொறுமையும் என் கூடவே
இருக்கும்..!

நாளிகைகள் கடந்து செல்ல
எனக்கும் ஒரு எல்லை
உண்டு என்று
சொல்லாமல் சென்றுவிடும்..!

அதுவும் என்னை அநாதையாக்க
நான் பிறந்த இடத்தை
நோக்கியே சென்று விடுவேன்..!

அது ஒன்றும் அவ்வளவு
மோசமான இடமில்லை
மூக்கை முடிக்கொண்டு
செல்ல..!

ஆதரவற்றோருக்கு
ஆறுதல் தரும்
அம்மா மடி அது..!

புண்ணியவதிகள் உண்டு
மிச்சப் பட்ட தீனிகள்
சேர்ந்து கிடக்கும்
அட்சய பாத்திரம் அது..!

அங்கு தான்
என் தோழிகளும்
நானும் தட்டி தட்டி
உண்ணுவொம்..
கைகளை அல்ல
கற்களை..!

சுவைகள் எல்லாம்
ஒரே மாதிரிதான்
பிரியாணியும் பராட்டாவும்
கூட ஒரே சுவையில்
எல்லாமே கெட்டுப் போய்
விட்டதாய் உணர்வேன்..!

மக ராசன்கள்
எல்லாம் ஏன் எச்சிலை
கூட அதற்குள்ளே
துப்புவார்கள் என்பது தான்
எனக்கும் புரியவில்லை..!

ம்ம்..
அவர்களுக்கு அது
குப்பை தொட்டி என்பதை
மறந்தே போய்விட்டேன்..!

எனக்கென்ன கவலை
அந்தோ தூரத்தில்
தெரிகிறதே..
வகை வகையான
தீனிப்பண்டங்கள்
சுவனமீதினில்
எனக்காக அவை காத்திருக்கின்றன..!!


1 Comment

Ananthi Raghunathan · ஜூலை 29, 2016 at 17 h 48 min

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் அதுபோல் உணவின் அருமை ஏழ்மையில் தெரியும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...