சுண்ணப்பொடி சுகந்தப்பொடி
சுந்தரியின் எண்ணப்படி.
வண்ணப்பொடி வசந்தப்பொடி
வந்திருக்கும் சொர்ணப்பொடி.

கோலப்பொடி கொஞ்சும்படி
குலமகளை விஞ்சும்பொடி,
சாயப்பொடி சாந்துப்பொடி
சரியவைக்கும் சந்தனப்பொடி.

மஞ்சள்பொடி மகிழும்படி
மங்கைப்பூச மருதாணிப்பொடி,
நெஞ்சம்பொடி ஆகும்படி
நெருங்கிவந்த தாழம்பொடி.

பச்சைப்பொடி பரவும்படி
பசலைகொண்ட வஞ்சிக்கொடி,
இச்சைப்படி இணையும்பொடி
ஏங்கவைக்கும் முல்லைக்கொடி.

சிவப்புப்பொடி சிரிக்கும்படி
சிலுசிலுக்குது சின்னகொடி,
மணக்கும்பொடி மயக்கும்படி
மாதுபோட்டாள் சொக்குப்பொடி.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.