மலர்பறிக்கும் கைகளில்
மண்வெட்டி , என்றும்
மணம்பரப்பும் தலையில்
கல்சட்டி , விரிந்து
மைவைக்கும் கண்ணில்
புதுமிரட்சி , புதிதாய்
நகைவைக்கும் இதழில்
நாவறட்சி , மென்மை
நடைபயிலும் காலில்
பெரும்தளர்ச்சி , நாளும்
பூமலரும் உடலில்
பூகம்பம் , வானின்
மதிபோன்ற முகத்தில்
மண்படிதல் , தூய
கருநிற முடியில்
கசடுறைதல் , ஈர்க்கும்
கனிதரும் கன்னம்
காயாதல் கண்டீர் .
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more