கவிதை

வரம் வேண்டும் தேவதையே…

ஏற்றம் தரும் வாழ்வில்
மாற்றம் தர வந்தவளே
மாற்றங்களை தந்து விட்டு
ஏமாற்றமும் தந்தது ஏன்?

நீ காற்றில் எனக்காக
தூது விட்ட முத்தமெல்லாம்
என் காதில் இடியின் சத்தமாய்
வந்து விழுவதேன்?

 » Read more about: வரம் வேண்டும் தேவதையே…  »

கவிதை

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.

 » Read more about: எங்க ஊர் ஆரம்பப் பள்ளி  »

புதுக் கவிதை

தனியாய்!

என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..! என் இதயப் படகு
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்! என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..!  » Read more about: தனியாய்!  »

கவிதை

தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்

மனிதா…
நீ பேராசையெனும்
தீக்குள் விரலை வைத்தால்…
உன் மனம் நொந்துபோகும்…
உன் விரல் வெந்துபோகும்!

மனிதா…
நீ காமவெறியெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மிருகமாகிடும்…

 » Read more about: தீக்குள் விரலை வைத்தால்  »

கவிதை

பள்ளிக்கூடம்

கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.

கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,

கண்சிமிட்டி பேசிய எழுத்து !

வாத்யாரின் பிறம்பை பார்த்து

பின்னுக்கு தள்ளி பயந்த காலு,

 » Read more about: பள்ளிக்கூடம்  »

கவிதை

நேசிப்பாய் வாசிப்பை!

வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!
வார்த்தைகளில் சொல்ல
வாராத இன்பத்தைத்
தருமுனக்கு வாசிப்பு!

அவரவரே அனுபவித்து
உணர்கின்ற மகிழ்ச்சி அது!
அனுபவித்துப் பார்!

 » Read more about: நேசிப்பாய் வாசிப்பை!  »

கவிதை

செய்யும் தொழிலே …

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!

தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …

 » Read more about: செய்யும் தொழிலே …  »

கவிதை

இரவின் ரசனை

“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”,

இரவின் அமைதியில்,
நெடுந்தூரமாய் மூழ்கிடவே,
ஆசைப்படுகிறேன்.
எனை அணைக்க வந்த இரவு,
என் உடலை
தட்டித் தாலாட்டுவதை
நான் உணர்ந்தேன்.

 » Read more about: இரவின் ரசனை  »

கவிதை

எது நிர்வாணம் ?

ஆதி மனிதன் உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன் பிறந்தான்
(அ)னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

 » Read more about: எது நிர்வாணம் ?  »

By இ. சாந்தா, ago
கவிதை

தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்

அல்லிமலர் போலிருக்கும்
அழகானப் பெண்ணருகில்
கொல்லிப்பலா கொஞ்சுகின்ற
கவிஞரிவர் தமிழ்நெஞ்சம்,
அள்ளிக்கொண் டுசென்றிடவே
ஆவலுடன் நிற்கின்றார்,
பள்ளியறைக் காத்திருக்க
பலகனவுப் பூத்திருக்க.

வெள்ளிநிலவு இங்குவந்து
விளையாட்டில் தனைமறந்து
பில்லியாட்ஸ் ஆடுகின்ற
பேரழகை என்னென்பேன்,

 » Read more about: தண்ணிலவும் தமிழ்நெஞ்சமும்  »