எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.
எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.
அகர முதல எழுத்தெல்லாம்
அன்பா சொல்லிக் கொடுக்கும்
சிகரம் செதுக்கும் சிற்றுளியை
சுகமா அள்ளிக் கொடுக்கும்.
ஆளும் வளர அறிவைவளர்த்து
பாலும் பழமாய் இனிமை சேர்க்கும்
முள்ளை ஒழித்து மலரை மலர்த்தி
வெள்ளை வண்ணம் வாழ்வில் சேர்க்கும்.
ஒன்றிரண்டு மட்டுமல்ல
ஒன்று முதல் இறுதி வரை
ஒவ்வொன்றாய்ப் போதிக்கும்
உன்னதப் பள்ளி
எங்க ஊர் ஆரம்பப் பள்ளி.
1 Comment
முல்லை ஹம்ஸா · அக்டோபர் 17, 2016 at 17 h 18 min
எளிய நடையில் ஒரு அற்புதமான கவிதை…….பள்ளி நாட்களை நினைவு கூற வைத்தமைக்கு நன்றிகள் கேப்டன்