அல்லிமலர் போலிருக்கும்
அழகானப் பெண்ணருகில்
கொல்லிப்பலா கொஞ்சுகின்ற
கவிஞரிவர் தமிழ்நெஞ்சம்,
அள்ளிக்கொண் டுசென்றிடவே
ஆவலுடன் நிற்கின்றார்,
பள்ளியறைக் காத்திருக்க
பலகனவுப் பூத்திருக்க.
வெள்ளிநிலவு இங்குவந்து
விளையாட்டில் தனைமறந்து
பில்லியாட்ஸ் ஆடுகின்ற
பேரழகை என்னென்பேன்,
துள்ளியாடும் பருவமதில்
தோகைதனை விரிக்கின்ற
நல்லழகுத் தேவதையை
நானிங்குக் காண்கிறேனே!
