பள்ளிக்கூடம்

கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம். கரும்பலகையில் கிறுக்கிய கையுடன், கண்சிமிட்டி பேசிய எழுத்து ! வாத்யாரின் பிறம்பை பார்த்து பின்னுக்கு தள்ளி பயந்த காலு, உயரம் கூடகூட அளவெடுத்து தச்ச சட்டைபோல, படிக்க படிக்க பாடங்களும் அறிவை ஒசத்த, வானை நோக்கி பறப்பதே, பள்ளிகூட வாழ்க்கை ! பணிவாய் பவ்யமாய் இன்பமாய் அமர்ந்த கூடம் !   இந்த, தேனீக்களாய் மொய்த்த கூட்டத்தில், சுவையோடு கூடிய நட்பு. மனங்களில் மகிழ்ச்சி வண்டுகளாய் Read more

இரவின் ரசனை

“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”, இரவின் அமைதியில், நெடுந்தூரமாய் மூழ்கிடவே, ஆசைப்படுகிறேன். எனை அணைக்க வந்த இரவு, என் உடலை தட்டித் தாலாட்டுவதை நான் உணர்ந்தேன். ஒவ்வொரு இரவும் தனித்தனி ருசிதான். பருகிப்பார் … அமிர்தம் ருசிக்கும்! பழகிப்பார் … உன் சுதந்திரம் புரியும்! உறவாடிப்பார் … உனக்கு சுகங்களைக் கொடுத்து போர்த்திவிடும்! வாயில் நீர்வடிந்து கசிகின்ற முழு தூக்கத்திலும் கூட, இரவின் பாதுகாப்பில் அசந்து அனைத்தும் மறந்திருப்பாய்.