கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.

கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,

கண்சிமிட்டி பேசிய எழுத்து !

வாத்யாரின் பிறம்பை பார்த்து

பின்னுக்கு தள்ளி பயந்த காலு,

உயரம் கூடகூட அளவெடுத்து

தச்ச சட்டைபோல,

படிக்க படிக்க பாடங்களும்

அறிவை ஒசத்த,

வானை நோக்கி பறப்பதே,

பள்ளிகூட வாழ்க்கை !

பணிவாய் பவ்யமாய்

இன்பமாய் அமர்ந்த கூடம் !

 

இந்த,

தேனீக்களாய் மொய்த்த கூட்டத்தில்,

சுவையோடு கூடிய நட்பு.

மனங்களில் மகிழ்ச்சி

வண்டுகளாய் மொய்க்க…

 

கிளைகளில் அமர்ந்த

மழைத்துளி நீரை

குலுக்கிய குலுங்களின் வாசம்.

 

வாழ்க்கை எங்கே போகிறதென்று

தெரியாமலே,

துள்ளலுடன் நடந்து

சென்று வந்த பள்ளிகூடம் !

 

தயங்கிடும்  மூளைக்கும்

சொல்லிக் கொடுக்குமே இந்த

அறிவுக்கூடம்!