என்தேசம் என்சுவாசம்
வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு
—– வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி
வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால்
—– வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு!
முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த
—– முட்செடியா இந்தநாடு? மானத் தாலே
தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால்
—– தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!








