பகையைத் துடைத்திடு

   எட்டுக் குடி கொண்ட இறைவா எட்டும் மக்கள் குரல் கேட்டு வா விரைவா கொட்டும் வெற்றி முரசு நமக்கே கொஞ்சும் தமிழ் ஒலிக்கும் நமக்கே பகையைக் கண்டு துடைத்திடு பசுமையை எங்கும் விதைத்திடு பகை என்ற நிலையை உதைத்திடு பைந்தமிழே பாராள வகை செய்திடு அடிமைக் கொண்டது தமிழினமா – மண்ணில் குடிமைக் கண்டது தமிழினம் கொடுமை நடக்குது தினம் தினம் கொக்கரித்து எழுதே தமிழினம்