தமிழை என்னுயிர் என்பேன்
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனிய என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தேனாய் சுவையாய் திகட்டாத — கனியாய் கண்ணாய் கனியமுதாய் மானாய் மயிலாய் மரகதமாய் — மலராய் மணியாய் மாம்பூவாய். வானாய் வளியாய் வயல்வெளியாய். — வழியாய் ஒளியாய் ஒலியினிலே. எங்கும் என்றும் எத்திக்கும் — எல்லாம் தமிழின் உயர்வாகும். ஓங்கும் தாங்கும் மனதினிலே — உருவாய் கருவாய் கவியினிலே. பொங்கும் பொழியும் புவிதனிலே — சங்கே முழங்கு சபைதனிலே. சொல்லும் சுவையும் இனித்திடவே — சுடராய் இருளை நீக்கிடவே கல்லும் மண்ணும் Read more
தோகைமயில் நடந்தால் போதும்
தொப்புள்குழி தெரியவா வேண்டும் ?
வாகைப்பூ மலர்ந்தால் போதும்
வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?
” தாயுடன் தாரமும்
—— தக்கதோர் வாழ்வினைச்
சேயுடன் சேர்ந்ததே
—— செல்வம் தரும்வாழ்க்கை .
நோயுடன் நின்றிடில்
—— நோகாமல் சேவைசெய்யும்
தாயுடன் தாரமும்
—— தருவரே நேசத்தை .”
விழியாலே கதைசொல்லும் வெள்ளிநிலவே! உந்தன் மொழிசொல்லும் கவிதையுமே மெளனம்தானோ? வீணாய்ப் பழிபோடும் எண்ணத்தின் பார்வையிது, விழியில் வழிகின்ற கவர்ச்சியிலே வழிமாறும் மனமும்தான். கன்னத்தில் கைவைத்தக் காரிகையே! கவின்மலரே! அன்னத்தில் கைவைத்து அனைவருக்கும் பகிர்ந்தாயோ? உன்னிடத்தில் தளிர்க்கின்ற உயர்வான அழகாலே மன்னனுமே காத்திருப்பான் மகாராணி ஆக்குதற்கே! சடுதியிலே குளித்தபின்னும் சடைப்பின்ன நேரமிலையோ? அடுப்படியில் அனலிடையே அழகுமலர் நீயிருக்க படிப்படியாய் சமையலினைப் பாங்காக நீமுடிப்பாய், நடிப்பதுபோல் செய்தாலும் நளபாகம் உன்செயலே! பார்வையிலே பொங்கலிட்டுப் Read more
தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை
திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம்
தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு
தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும்
தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில்
திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு
தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை
தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்
மாக்கோலம் போடுகின்ற மங்கையே – உன் மனக்கோலம் என்னாயிற்று சொல்வாயே! கலர்க்கோலம் போடுகின்ற காரிகையே – உன் கனவுக்கோலம் என்னாயிற்று சொல்நீயே! அதிகாலைத் துயிலெழுந்த அழகியே – உன் அடிமனதில் உறங்குபவர் யாரோ? பதுமையாய் முகங்காட்டும் பாவையே – உன் பவளவிதழில் பந்திவைப்பவர் எவரோ? மல்லிகையைச் சூடியிருக்கும் மாதவியே – உன் மாமனவனை நினைக்கையிலே புன்சிரிப்போ? கைவளையல் போட்டிருக்கும் கண்மணியே – உன் கண்ணாடி வளையலுக்குள் காதலனா? பாவாடைத் தாவணியில் Read more
கழிக்கின்றோம் பழையவற்றைக்
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
வன்முறையா போகியிங்கே !
உழைக்கின்ற வன்கைகள்
உயர்வுகளைப் பெற்றிடவே
விழைந்தெழுந்து ஒற்றுமையாய்
வென்றிடுவோம் தோழர்களே!
அலைபாயும் கடல்தனிலே
அணையாத விளக்காவோம்!
நிலையற்றோர் வாழ்ந்திடவே
நெறிபடைப்போம் தோழர்களே!