உள்ளம் என்பது உறங்கிக் கிடப்பது;
கள்ளம் வந்தால் கலங்கிச் சுழல்வது.
பள்ளம் மேடுகள் பார்த்துச் செல்வது;
துள்ளும் ஆசையில் துரத்தி மகிழ்வது.
மனது நம்மை மயக்கும் மாயை;
தனது என்று தாவும் பாவை.
பிணக்கு கொண்டு பிதற்றும் சாது;
கணக்கு உண்டு காணும் போது.
நினைப்பதை அடைய நீண்டு வளரும்;
வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும்.
அணையாய் நின்று அறமாய் வாழும்;
கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.
செய்ததை எண்ணிச் செத்து மடியும்;
எய்ததை கண்டு ஏங்கி ஒடியும்.
உலகை நோக்கி ஒடுங்கி
கலங்கி கரைக்கும் காரிருள் நெருடலே!