நெருடல்

மனது நம்மை மயக்கும் மாயை;
தனது என்று தாவும் பாவை.
பிணக்கு கொண்டு பிதற்றும் சாது;
கணக்கு உண்டு காணும் போது.

நினைப்பதை அடைய நீண்டு வளரும்;
வினைப்பயன் கண்டு வெம்பித் தளரும்.
அணையாய் நின்று அறமாய் வாழும்;
கனையாய் வந்த கவர்ச்சியில் வீழும்.