கவினழகுத் தெரிந்தால் போதும்
கைமுழுதும் தெரியவா வேண்டும் ?
நளினமும் புரிந்தால் போதும்
நாட்டியமும் உமக்கா வேண்டும் ?
விழிதிறந்துப் பார்த்தால் போதும்
விரகமும் தெரியவா வேண்டும் ?
மொழிபேச நகைத்தால் போதும்
மோகத்தை அழைக்கவா வேண்டும் ?
கூந்தல்தனை முடிந்தால் போதும்
குழல்தனை விரிக்கவா வேண்டும் ?
சாந்தமானப் பார்வை போதும்
சரசமாட அழைக்கவா வேண்டும் ?
உடையழகு தெரிந்தால் போதும்
ஒய்யாரம் புரியவா வேண்டும் ?
நடையாலே ஈர்த்தால் போதும்
நங்கையே உனக்கெது வேண்டும் ?