தேனாய் சுவையாய் திகட்டாத
— கனியாய் கண்ணாய் கனியமுதாய்
மானாய் மயிலாய் மரகதமாய்
— மலராய் மணியாய் மாம்பூவாய்.
வானாய் வளியாய் வயல்வெளியாய்.
— வழியாய் ஒளியாய் ஒலியினிலே.
எங்கும் என்றும் எத்திக்கும்
— எல்லாம் தமிழின் உயர்வாகும்.
ஓங்கும் தாங்கும் மனதினிலே
— உருவாய் கருவாய் கவியினிலே.
பொங்கும் பொழியும் புவிதனிலே
— சங்கே முழங்கு சபைதனிலே.
சொல்லும் சுவையும் இனித்திடவே
— சுடராய் இருளை நீக்கிடவே
கல்லும் மண்ணும் தோன்றிடுமுன்
— கவியில் தந்தான் இலக்கணமே.
வெல்லும் மொழிதான் எம்மொழியே
— சங்கே முழங்கு கவியினிலே.
அறுசீர் விருத்தம். மா – மா – காய்.