வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு என்நெஞ்சில் வந்தவன் திருமகன் என்று வருவான் கார்கொண்ட வண்ணமும் கனியிதழ் வாய்கொண்டு கனிமுத்தம் என்று தருவான் நேர்கொண்ட வீரமும் கொடை அன்புகொண்டவன் நிம்மதி என்று தருவான் போர்கொண்ட வேங்கையாய் புறங்காணா வேந்தனாய் புலியாக வாழும் வீீரன் சீர்கொண்டு வருவானோ சிலையாநான் வாடி சிந்தையில் அவனை வைத்தேன் பார்வென்று தார்மாலை சூடிவரும் போதிலே பரிசொன்று நான் சூடுவேன்

வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! ) தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன் தமிழரை கலங்க வைத்தான் இன்றோ நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் ! கவிதை உலகின் காவியத் தலைவன் அன்னை தமிழின் அழியாக் கவிஞன் ! உடலால் மறைந்து உள்ளத்தில் நிறைந்தவன் உலகத் தமிழர் நெஞ்சினில் நிலைத்தவன் ! வாய்மையுடன் வாழ்ந்த வாலிபக் கவிஞன் உள்ளத் தூய்மையால் உயர்ந்த Read more

கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும், துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும், படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும் பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும், வடிக்கின்ற கவியெல்லாம் வாழ்வின் அமுதம் வற்றாது அவர்புகழோ வானும் வாழ்த்தும். திரைத்துறையில் நீராடி தீந்தமிழ்ச் சொல்லில் தினம்விளையா டிவரும்நம் தெள்ளுத் தமிழின் நறைபழுத்தச் சொல்லாளன் நாட்டின் செல்வம் நயமாக எடுத்துரைக்கும் நல்லேர் உழவன், குறையில்லாத் Read more

அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா ) தந்திடும் வாசம் தன்னை தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே உன்னிடம் கண்ட பாசம் உணர்ந்தவன் சொல்லு வேனே பண்னெடுங் காலம் தொட்டே பண்பெனில் தாய்மை தானே உன்னடி பணிதல் ஒன்றே உண்மையில் உவகைத் தேனே!

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம் கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக் கமழ்கின்ற தமிழே..நீ வாராய்! காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில் கணக்கின்றி எந்நாளும் தாராய்! சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச் சுடர்கின்ற தமிழே..நீ வாராய்! சொக்கட்டான் கோடாக இக்கட்டே இல்லாமல் தொடர்கின்ற சீர்வேண்டும் நேராய்! பொற்புண்டு! புகழுண்டு! கற்புண்டு! கனிவுண்டு! பொலிகின்ற தமிழே..நீ வாராய்! பொன்னான என்னாவைத் தண்ணீரின் படகாக்கிக் கண்ணான கவிவேண்டும் சீராய்! வற்புண்டு! வடிவண்டு! வெற்புண்டு! வியப்புண்டு! மணக்கின்ற தமிழே..நீ Read more

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சாத நெஞ்சினரே வாழி! கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ் நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி! முத்துவேலர் பெற்றெடுத்த முத்தமிழின் பெட்டகமே வாழி! கத்துகடல் அலையனைத்தும் கவறிவீச கலைஞரே வாழி! அண்ணாவின் தம்பியாக அவனியிலே உயர்ந்தவரே வாழி! பொன்னானத் தமிழகத்தின் புகழ்பெற்ற தலைமையே வாழி! பகுத்தறிவுப் பாதையிலே பயணிக்கும் பைந்தமிழே வாழி! தகுதியானத் தலைமகனாய்த் தமிழீந்தத் தன்மானமே வாழி! அனல்தெறிக்க வசனமெழுதி அன்னைத்தமிழ் வளர்த்தவரே வாழி! கனல்நிறைந்த வார்த்தைகளால் கவர்ந்திழுத்த தமிழ்மகனே வாழி! Read more

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக் கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில் கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் , வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும் வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும் . நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள் நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ தொகையாக வந்தாலும் Read more

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார் சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார் கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார் கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார் பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார் பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர் சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச் சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் ! குணம்பார்க்கும் குணமில்லா மதிப டைத்தோர் குலமகளின் தரந்தன்னைப் பார்த்தி டாமல் பணம்பார்த்தார் ! பாவையரைப் பணத்தை வைத்துப் பார்க்கின்ற இழிவான செயலைச் செய்தார் Read more

முதல் வசந்தம்!

செல்வமோ பல கோடி செயலாற்ற பல பேர்கள் வெல்வாரோ யாரு மிலர் வெறுப் பாரும் உலகிலில்லை சொற்கேட்டு நடப் பதற்குச் சொந்தங்கள் அணி திரள்வர்! எல்லாமே இருந் தாலும் என்மனதில் அமைதி இல்லை! பொல்லாத எண்ண மொன்று புகுந்து ஆட் கொண்டதனால்! எல்லாமெ எனக் கென்று இடர்பட்டேன் இத்தனை நாள்! நல்லதோர் வழி கண்டேன் நான் அதைக் கடைப்பிடித்தேன்! எல்லோர்க்கும் பகிர்ந் தளித்தேன் என் செல்வம் அத்தனையும்! வல்லோனோ என் Read more

நம்தோழர்!

(பாவகை: கலித்துறை) மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய் அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால் உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்! உலகினில் பஞ்சம் உணவதில் வராமல் காத்திடவோர் அலகென உழைப்பின் ஆற்றலைத் தருமோ ருன்னதமாய் நிலமதை உழுது நீக்கம றவுண வூட்டுகின்ற நலமிகுத் தொண்டு நாட்டிடும் உழவர் நம்தோழர்! ஆற்றினில் நீரும் ஆழமாய் வற்றும் துயர்களுடன் காற்றினில் ஈரம் கலங்கிடும் Read more