அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!

முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!

அண்ணாவின் தம்பியாக
அவனியிலே உயர்ந்தவரே வாழி!
பொன்னானத் தமிழகத்தின்
புகழ்பெற்ற தலைமையே வாழி!

பகுத்தறிவுப் பாதையிலே
பயணிக்கும் பைந்தமிழே வாழி!
தகுதியானத் தலைமகனாய்த்
தமிழீந்தத் தன்மானமே வாழி!

அனல்தெறிக்க வசனமெழுதி
அன்னைத்தமிழ் வளர்த்தவரே வாழி!
கனல்நிறைந்த வார்த்தைகளால்
கவர்ந்திழுத்த தமிழ்மகனே வாழி!

ஐந்துமுறை நாடாண்டு
அல்லல்பல தீர்த்தவரே வாழி!
பைந்தமிழில் சென்னையென
பெயர்படைத்தச் செம்மல்நீ வாழி!

பெண்களுக்குச் சொத்துரிமை
பகிர்ந்தளித்த தலைவர்நீ வாழி!
கண்ணொளி வழங்கியென்றும்
கருணையால் காத்தவரே வாழி!

அய்யன்திரு வள்ளுவர்க்கு
அலைகடலில் சிலைவைத்தீர் வாழி!
மெய்யானத் தவவாழ்வு
மேதினியில் கண்டவரே வாழி!

தமிழ்நாட்டின் நாயகமாய்த்
தடம்பதித்து வென்றவரே வாழி!
அமிழ்தான நூல்களெழுதி
அழகுற்றக் காப்பியமே வாழி!

அகவைதொன் னூற்றுமூன்றில்
அடியெடுத்து வைப்பவரே வாழி!
முகவரியிலாத் தமிழர்க்கு
முகமானத் தலைவாநீ வாழி!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.