அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா ) தந்திடும் வாசம் தன்னை தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே உன்னிடம் கண்ட பாசம் உணர்ந்தவன் சொல்லு வேனே பண்னெடுங் காலம் தொட்டே பண்பெனில் தாய்மை தானே உன்னடி பணிதல் ஒன்றே உண்மையில் உவகைத் தேனே!