என் மனமே …

எதிரெதிர் சாளரத்தின் திரை கசிவில் கரைந்து போன என் மனமே அந்தியையும் விடியலாக்கி வினவாத வாா்த்தைக்கு விடை காணும் என் மனமே நாழிகையயும் நாட்களையும் தூசுகளாக்கி திங்கள் கழித்து ஆண்டுகள் வளர்த்த என் மனமே பேசி தெளியாமல் பூங்காவில் நனையாமல் யதாா்த்தமாய் உரசாமல் நித்தன் இவனென்று நித்திரை தொலைத்த என் மனமே தாய்மை தோற்குமோ மொழிகள் அழுதிடுமோ நம் புரிந்துணர்வில் விமர்சனங்களும் மலர் கொத்தாய் மாறுமோ

என்னுள்

பொடி-நடையாய் நடந்தேன், தொலைதூர பூங்காவனம்…! தடையாகித் தடுத்தது, உள்ளத்து நினைவுகள்…! வலி-யேதோ உணர்த்தியது, அழைப்பதாய் மறந்தவள்…! பலகாலம் பழகியவள்! சிலகாலமாய் பிரிந்தவள்…! எதிர்காலமாய் தோன்றியவள், புதிராகவே மறைந்தவள்…! அவள் நினைவாய் இப்போதும் ரணகளமாய் நொடி-பொழுதுகள்…!!

உதவாத உறவுகள்

கண்களில் நூறு கவிதைகள் கனவுகளை விதையாக்கி காதலின் இனிமைக்காய் காலம் கனியட்டும் என்று காத்திருப்பு! வரன் தேடி வரம் தந்தவர்கள் வளமான வாழ்வை பரிசளிக்க உத்தமர் ஒருவனை தேடியே உயிரின் துணையாக இணைத்தனர்! மங்கை அவள் ஆனந்தத்தில் மனிதாபிமானத்தை தேடியவள் ஏமாற்றத்தில் உழன்றால் எதிர்பார்ப்புக்களை இழந்தாள்! இல்லாள் அவள் இல்லத்தை இயன்றவரை இயக்கி வைத்தாள் இதயத்தில் வலி சுமந்தாள் இயந்திரமாய் அவள் சுழன்றாள்! ஆறுதலை தேடியவள் ஆதரவு இன்றி தனியானாள் Read more

எப்படி முடிகிறது உன்னால்?

எப்படி முடிகிறது உன்னால் என்னை ஏமாற்றி செல்ல ?? எப்படி முடிகிறது இத்தனை நாள் பேசாமல் இருக்க ?? எப்படியடா முடிகிறது என்னை மறந்து உன்னால் சந்தோசமாய் வாழ ?? இப்படி ஆயிரம் கேள்விகள் உண்டு பதில் சொல்லத்தான் நீ இல்லை என்னோடு … போலி சிரிப்போடு போராடுகிறேன் விட்டு சென்றதுக்கு பதிலாய் கொன்று சென்றிருகாலம் என்னை …

உறவின் அர்த்தம் புரியாமலே

நாம் அன்பால் இணைந்தோம் நம் உறவின் அர்த்தம்? இன்னமும் புரியவில்லை எனக்கு! நம்முள் விரிசல் ஏற்படுமோ அச்சம் என்னுள் தினமும். உன் நினைவால் நானும் உன்னை என்னவனாய் நினைத்து வாடுகிறேன் நாளும் சருகாய் …

ஈன்றவர்களை நினையாது …

ஆசையாய் பெற்றவர்கள் ஆதரவின்றி வாழ்கின்றனர். ஆதவனின் அரவணைப்பால் ஆகாரமின்றி தவிக்கின்றனர். ஈன்றவர்களை நினையாது ஈசனை வழிபடுகின்றனர். ஈருலகம் சென்றாலும் ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை? ஊர் வாயை மூடுவதற்காய் ஊமையானார்கள் பெற்றவர்கள். ஊசியும் நூலுமாய் ஊசலாடுதே இவர்கள் வாழ்வு. ஏட்டிலே படிப்பதற்காய் ஏணியாய் இருந்தார்கள் ஏழ்மையை காட்டாது ஏரோபிளேனில் பறக்க வைத்தனர். ஆசியை பெறுவதற்காய் ஈன்றவர்களை நாடி வந்து ஊர் போற்றும் அதிசயமாய் ஏந்திடுங்கள் உங்கள் மழலைகளாய்!

குறளோடு உறவாடு!

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! – குறள்
வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்!
தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! –
தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!