கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!

வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!

மங்கை அவள் ஆனந்தத்தில்
மனிதாபிமானத்தை தேடியவள்
ஏமாற்றத்தில் உழன்றால்
எதிர்பார்ப்புக்களை இழந்தாள்!

இல்லாள் அவள் இல்லத்தை
இயன்றவரை இயக்கி வைத்தாள்
இதயத்தில் வலி சுமந்தாள்
இயந்திரமாய் அவள் சுழன்றாள்!

ஆறுதலை தேடியவள்
ஆதரவு இன்றி தனியானாள்
அடைக்கலம் தந்தவனே
அடிமை விலங்கை பூட்டி விட்டான்!

பெண்ணாக பிறந்ததினால்
பெரும்பாவி எனப்பெயர் எடுத்தாள்
உற்றவர் தேடி தந்த உறவு
உதவாத உறவாக மாறியதே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.