20160414_1429எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே

அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே

நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே

பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்

நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே

தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ

நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ