பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!

தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!

வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!

பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!

எதிர்காலமாய் தோன்றியவள்,
புதிராகவே மறைந்தவள்…!

அவள் நினைவாய் இப்போதும்
ரணகளமாய் நொடி-பொழுதுகள்…!!