மின்னிதழ்
ஹைக்கூ திண்ணை 9
வாசம் புதிது வண்ணம் புதிது மு.முருகேஷ் தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் - ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.