மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 8  இதழின் முகப்புப் பக்கத்தை
சுட்டியால் தட்டி அல்லது டச் செய்து இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

பட்டறிவின் இலக்கிய வடிவமே துளிப்பா

புதுவை தமிழ்நெஞ்சன்

மரத்தடியில் புத்தரின் வருகைக்காக மாணவர்கள் காத்திருந்தனர். கண்கள் பூத்திருந்தனர்
மரத்தில் குரங்குகள் தாவிக் கொண்டும் அணில்கள் அதனோடு போட்டிப் போட்டுக் கொண்டுமிருந்தன.
குயில்கள் குக்கூ என கூவவும், மயில் அகவவும், கிளிகள் கீக்கீ என்றும் கீச்சிடும் இயற்கை சூழல்
மரந்தடியெங்கும் பூக்கள் சிதறிக் கிடந்தன. பூவுக்குள் எறும்புகள் போய் வந்து கொண்டிருந்தது.
புத்தரின் வருகைக்கான ஓசை எல்லோரையும் கிழக்கு திசை நோக்கி பார்க்க வைத்தது
வந்த புத்தர் எல்லோரையும் கூர்ந்து பார்த்தார். சிறிது நேரம் அமைதி காத்தார். விழுந்து கிடந்த மலர் ஒன்றை கையிலெடுந்தார்
ஆனந்தன் என்கிற தலைமாணாக்கரிடம் கொடுத்துவிட்டு, இன்றைய பாடம் முடிந்ததென்று வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்.
காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமும் குழப்பமே எஞ்சியது, கவலை மிஞ்சியது, மனம் துஞ்சியது, சென் கெஞ்சியது
பாடமே நடத்தாமல் பாடம் முடிந்து விட்டது என்று சொன்னதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மாணவர்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து கொண்ட ஆனந்தன் பேசத் தொடங்கினான்.
அன்பானவர்களே!
அறிவானவர்களே!
அறிவர் ஆகிய புத்தரின் ஒவ்வொரு செயலும் பொருள் உள்ளதேயாகும்.பூவை எடுத்து கொடுத்ததும் எதுவும் சொல்லாமல் போனதற்கும் காரணம் வேறொன்றுமில்லை
எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.
உலக இலக்கியத்தில் மிகவும் பழமை வாய்ந்தது நம் பழந்தமிழ் இலக்கியம் தான்.கழக இலக்கியம் போன்று நிப்பானியப் பழம் பாடல்களான தங்கா,இரங்கா செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்பட்டது.
பட்டறிவின் இலக்கிய வடிவமே துளிப்பா.
பட்டறிவற்று எழுதுவது ஆணிவேர் இன்றி நீர்பாசிபோல நகர்ந்து கொண்டே இருக்கும். துளிப்பா இயற்கையின் மறுவடிவம்.மாந்தநேயத்தின் செயல் உருவம்.
விளக்கிச் சொல்லாதீர் அது கட்டுரையாகிவிடும். விளங்கிக் கொள்ளட்டும் அதுதான் துளிப்பா வெற்றியின் கமுக்கம்.
பாட்டரங்கில் கைத்தட்டல் வாங்கும் வகையான பாவல்ல துளிப்பா. அடி மனத்தில் ஆழ்மனத்தில் கிடக்கும் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அகமகிழ்வை உண்டாக்கும் வல்லமை கொண்டது துளிப்பா.
குயவர் பானை செய்வது போன்றது துளிப்பா. அவனின் கை பேசுவது போல எழுதுபவனின் மனம் பேச வேண்டும். அவனின் ஒவ்வொரு விரலும் ஒரு வளைவை வடிவத்தை உருவாக்கும், கருவாக்கும்
துளிப்பா எளிமையானது. ஆனாலும் வலிமையானது.துளிப்பா என்பது வள்ளுவரின் வெல்லும் சொல் போன்றது. நாம் கொடுக்கும் தொலைவரி ஆனது.
மரபுப்பா, புதுப்பா வணக்கம் சொல்வதைப் போன்றது. தன்னிரு கைகளையும் சேர்த்து வணக்கம் சொல்லலாம்
துளிப்பா என்பது கைக்குலுக்குவதைப் போன்றது. படைப்பவர் ஒரு கை நீட்ட படிப்பவர் தன் கை நீட்ட இருவரும் மகிழ்ந்து கைக்குலுக்குவது போன்றதாகும்.
சீயோ என்பவர் துளிப்பா எழுதும் பெண் பாவலர். அவரின் ஊருக்கு மிகவும் புகழ்பெற்ற துளிப்பா பாவலர் ஒருவர் வந்திருந்தார் அவரிடம் தான் எழுதிய துளிப்பாவை காண்பித்தார். அதனை படித்து நிறைவடையாது குயில் என்ற பாடுபொருளைக் கொண்டு எழுதிவரச் சொன்னார்.
மறுநாள் எழுதி எடுத்துப் போனதைப் படித்து பார்த்து இது துளிப்பாவே அல்ல என்று திருப்பிக் கொடுத்து விட்டார்
சீயோ இரவு முழுவதும் சிந்தித்துச் சிந்தித்து எழுதி, எழுதிக் கிழித்துக் கிழித்து இரவும் மடிந்து விட்டது. பொழுதும் விடிந்து விட்டது

கடைசியாக ஒரு துளிப்பா

‘‘இரவு முழுவதும்
குயில்… குயில்
இறுதியில் விடிந்ததும்’’

மறுநாள் காண்பித்தபோது இதுதான் ஐக்கூ என ஒப்புக் கொண்டார் காரணம், இதில் செயற்கையாக எதுவுமில்லை. தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் முனைப்புமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அதில் உண்மையான, இயற்கையான பட்டறிவு இருந்தது என்பதுதான்.
துளிப்பா இலக்கணம் அறிந்தவர்கள் அதிகமாக எழுத மாட்டார்கள் அல்லது எழுதுவார்கள். முரணாக இருக்கிறதா அதுதான் துளிப்பாவிற்கான அடிப்படை இலக்கணம்.
துளிப்பா ஒருவகையில் விடுகதைப் போன்றது. ஆனாலும் விடுகதையல்ல. விடுகதைக்கும் துளிப்பாவுக்கும் அணுவளவே வேறுபாடு, மாறுபாடு.
புல்லாங்குழல் போன்றது துளிப்பா. அதை சரியாக, முறையாக ஊதத் தெரிந்து மனத்தை மயக்கும் இசையை எழுப்புவான்
தெரியாதவன் அதனை ஊதாங்குழல் போல வெறுங் காற்றை வெளியிடுவார்

நிப்பானிய ஐக்கூ வகைமைகள்

ஐக்கூ – துளிப்பா
சென்ரியூ – நகைத்துளிப்பா
லிமரைக்கூ – இயைபுத் துளிப்பா
ஐப்புன் – உரைத் துளிப்பா
ஐக்கா – ஓவியத் துளிப்பா

துளிப்பா புதிய வகைமைகள்

01)
லிமரைக்கூ+சென்ரியூ ;;லிமர்சென்
இயைபு நகைத்துளிப்பா

02)
லிமரைக்கூ+ஐக்கா :: லிமர்கா
இயைபு ஓவியத் துளிப்பா

03)
லிமரைக்கூ+ஐப்புன் ::லிமர்புன்
இயைபு உரைத் துளிப்பா

04)
சென்ரியூ+ஐக்கா :: சென்கா
நகை ஓவியத் துளிப்பா

05)
சென்ரியூ+ஐப்புன் :: சென்புன்
நகை உரைத் துளிப்பா

06
ஐப்புன்+ஐக்கா :: புன்கா
உரை ஓவியத் துளிப்பா

07)
பாத் துளிப்பா
உரையின்றி மரபுப்படி,
புதுப்பா அமைத்து
இறுதியில் துளிப்பா அமைத்திடுதல்
பாத் துளிப்பா

08)
ஒளித் துளிப்பா
ஓவியமின்றி ஓளிப்படத்திற்கு
துளிப்பாவானால்
ஒளித் துளிப்பா

இவ்வகையில் புதிய முயற்சியாக கரந்தடிப் 2003 இதழிலும் «மழை விடும் நேரம் « என்ற துளிப்பா நூலிலும் இடம் பெற்றிருக்கிறது

நிப்பானில் ஐக்கூ
தமிழில் துளிப்பாள்
மழை மண்வண்ணம்
பெறுவதைப் போன்றது இலக்கியங்கள்.

துளிப்பா என்பது புதிர்படம் போன்றது, அதில் ஒப்பனை செய்யக் கூடாது. சிலர் ஒளிப்படம் என்று ஒப்பனை செய்துவிட முயல்கின்றனர்.

களத்து மேட்டில் நெற்கதிர் அடிக்கும் காட்சியைப் போல குவிந்திருக்கும் நெற்கள். களத்தைச் சுற்றி சிதறிப்பறந்து கிடக்கும் பதர்கள் பதர்கள் முளைத்தாலும் நெற்கதிர் ஆவதில்லை.

எங்கள் வீட்டில் இரண்டு திண்ணைகள். ஒன்று சின்னத் திண்ணை மற்றொன்று பெரியத் திண்ணை. அரசர்கள் வழிப்போக்கர்களுக்காக கட்டி வைத்த சத்திரம் போன்றது திண்ணைகள்.
எங்கள் வீட்டு பெரியத் திண்ணையை இடித்துவிட்டு ஓர் அறையையே கட்டினார்கள் அவ்வளவு பெரியது. ஆனால் இன்று திண்ணைகள் அற்ற வீடுகளையே காணமுடிகிறது
முன்பிருந்த வாழ்வியல் சூழல் இன்றில்லை. நம்மை தற்காத்துக் கொள்ளும் ஆய்தமாக நம் இலக்கியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் – இன் என்ற சென் பயிற்றுநரிடம் பேராசிரியர் ஒருவர் சென் கற்க வந்தார். வந்தவர் மூச்சு விடாமல் அலை நாக்கு போல ஓயாது பேசிக்கொண்டே இருந்தார்
அமைதியாக இருந்த நான் – இன் தேநீர்க் குடித்துவிட்டு பேசலாம் பாடல் எழுத கற்கலாம் என்றார்.
இரண்டு குவளைகள் வைத்து தேநீர் ஊற்றினார்
குவளை நிறைந்தும் ஊற்றிக் கொண்டே இருந்தர்
அதனைப்பார்த்த பேராசிரியர் ‘‘தேநீர் வழிகிறதே பார்க்கவில்லையா’’என்றார்.
இதைப்போலத்தானா நீங்களும் பலவிதமான எண்ணங்களையும் எதிர்ப்பார்ப்புகளையும் நிரப்பிக் கொண்டு வந்துள்ளீர்கள் என்பது உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது. உங்கள் மனம் என்னும் குவளையில் இருந்து அவற்றை வெளியேற்றாமல் பாடம் நடத்துவது பயனற்றது.
சென் என்பதற்கு நிறைகுடமோ. குறை குடமோ தேவையில்லை. அதற்கு தேவை வெற்றுக்குடம்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »

நேர்காணல்

வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா

கோவை லிங்கா என்கிற சொக்கலிங்கம் ஐயா….

இன்று முகநூலில் எத்தனையோ மரபுப் பாவலர்கள் உலவி வந்தாலும்  பாவகைகளின் துல்லியங்களும் இலக்கணங்களும் நன்கு அறிந்து. யாப்பில் ஆழமான தேர்ச்சி பெற்றவர் கோவை லிங்கா ஆவார்.

 » Read more about: வெண்பா வித்தகம்(ர்) கோவை லிங்கா  »

நேர்காணல்

உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்

 நேர்கண்டவர் :

தமிழ்செம்மல் 
இராம வேல்முருகன் வலங்கைமான்

 உங்கள் சொந்த ஊர் எது ? பெற்றோரைப் பற்றிச் சொல்ல முடியுமா ?

           என் சொந்த ஊர் –

 » Read more about: உலக கவியரங்கெங்கும் சரஸ்வதி பாஸ்கரன்  »