நேர்காணல்
தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்
தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.