காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ கவிதைகளை வாசித்த மக்களுக்கு Read more

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்       சாரும் புவியின் முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்       இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத்       தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச்       சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம் அரபு நாட்டு Read more

வலைக்குள் மலர்ந்த வனப்பு

பாலமுனை பாறுக் சேர் அற்புதமான, அருமையான மனிதர். கவிதைத்துறையைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு கடல். நூலின் மீதான சிறு குறிபொன்றை கவிதை வடிவில் இங்கு வரைகிறேன் .இந்த முயற்சி மஹாகவி உருத்திர மூர்த்தி ,குறிஞ்சித் தென்னவன், பாலமுனைப் பாறூக் என்ற மூத்த மேதைகளின் நடையில் அமைந்தது. ஈழத்தின் குறும்பா, உலகுக்கு ஒரு முன் மாதிரி. அதை தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள வாசகர்கள் அறிவார்கள் . பாவேந்தல் பாறூக் சேர் Read more

தூக்கம் தொலைத்த இரவுகள்

கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா? 8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 6

கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது. அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை. இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது. இப்படலத்தில் மணமகளான (பூதேவி) சீதைக்கு அலங்காரம் செய்யும் அழகினை, கம்பர் தனது கவித்திறனை, இந்த “ கோலம் காண் படலம்” முழுவதிலும் தெள்ளு தமிழ்ச் சுவையில் அள்ளித் தெளிக்கிறார். படிக்கப் படிக்க இப்பிறவி நமக்குப் போதாது என எண்ணத் Read more

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி வரம்போடு தம்வாழ்வை     வகுத்தளித்து வாழ்ந்துவந்த பெரம்பலூரில் பிறந்திட்ட     பெருவைரம் இராமதாசு, உரமாக இருந்துவந்து     உயர்வான சிற்றிதழைத் தரமான எழுத்துகளால்     தவழவிட்டு மகிழ்ந்துவந்தார். பெற்றெடுத்த பிள்ளையினும்     பிரியமுடன் வளர்த்துவந்த சிற்றிதழைத் தம்பொறுப்பில்     சிரமங்கள் பலவிடையே, முற்றும்நம் தமிழ்வளர     முனைப்பாக பாடுபட்டு உற்றதுணை யாயிருந்து     உயிரையும் உவந்தளித்தார். துபாயிலவர் Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார். இராமன் இலக்குவன் இருவரையும் மறைவில் நின்று காணும் அனுமன் … “சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் “ என்று Read more

கம்பன் கவிநயம்… தொடர் – 4

கம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி…..) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்….சுவையுங்கள்.

“ வெய்யோன் ஒளி, தன் மேனியின்,
விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும்,
இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி,
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர்,
அழியா அழகு உடையான்!”

ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.

கம்பன் கவிநயம்… தொடர் – 3

”நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா”