கம்பனைப்போல் இனியொரு கவியைப் பெறமுடியுமா ? அழகான சொல்லோவியம் அவனது இராமாயணப் பாடல்களில் காண முடிகிறது.

இந்தக் காட்சியைப் பாருங்கள்:

கைகேயி தனது வரத்தால் இராமனைக் காட்டுக்கு அனுப்பவும் தனது மகன் பரதன் நாடாளவும் மேற்கொண்ட செயல்களால் வெகுண்டெழுந்தான் இராமனின் தம்பி இலக்குவன்.

”உனக்குரிய அரசைப் பறித்த கைகேயியையும் அதற்கு
உடந்தையாயிருந்த தசரதன் முதலானவர்களையும் உடனே கொன்று உனக்குப்பட்டாபிசேகம் செய்து வைக்கிறேன்”
…என்று சீறி நின்ற இலக்குவனைப் பார்த்து இராமன் அறிவுறுத்துவதாக கம்பன் மிக அழகாகக் கூறுகிறான்.

”நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!”

”மூவுலகையும் வெல்லும் திறன் உனக்கு இருக்கிறது. நன்கறிவேன். நான் சொல்வதைக்கேட்டு
சினம் கொள்ளாது தணிவாய். வளமான நல்ல தண்ணீர் வரவில்லையெனில் (வற்றிவிட்டாலும் ) அது நதியின் பிழையாகுமா ? நல்லறமாகிய வாய்மையைக் காப்பாற்றிய நம் தந்தையின் பிழையல்ல. தந்தையின் உத்தரவால் கைகேயி ஆணையிட்டாள்.
இதில் அவளின் பிழையும் இல்லை. இது அறிவின் பிழை என்றும் கொள்ளக்கூடாது. மகன் பரதனின் குற்றமும் இல்லை லட்சுமணா… இது விதியின் குற்றம். எனவே அறத்திற்கு எதிராக சினம் கொண்டு எழுதல்கூடாது. ”

என்று விளக்கும் இராமனின் சொற்களால் இலக்குவன் சினம் தணிகிறான் என்றே அருமையாய் கம்பர் தனது கவி ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.

ஊழ்வினை உருத்துவந்து ஊட்டுகிறது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொன்னதை முன்பே கம்பன் மதியின் பிழையன்று இது விதியின் பிழை என்று கூறுகிறார்…..நதியில் எப்போதுமே நீர் நிறைந்து காணப்படுதல் அரிது. அப்படி இருப்பினும் தூய நீரின்றி மாசுடன் காணப்பட்டாலும் அது நதியின் பிழையல்ல என்று எடுத்துக் கூறுவதில் கம்பனுக்கு நிகர் கம்பனே.

இக்கருத்தையே கவியரசர் கண்ணதாசனும் தனது திரையிசைப் பாடல் வழி…

”நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா”

என இன்று கம்பனின் கனிரச இன்பத்தை நமக்களித்தார்.

தொடர் 2
தொடர் 4


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »