இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 11

கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 11  »

புதுக் கவிதை

மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்

விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும்!
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும்!
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும்!

 » Read more about: மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்  »

புதுக் கவிதை

யாராவது தூண்டிலோடு வருவார்களா?

ஒரு ஜன்னலின்
கதவொன்றில் தெரிகிறது
அவளின் நிழலாடும்
உருவம்…

இரவுநேர வெப்பச் சலனத்தில்
கிணற்று நீரில்
எத்தனை முறை குளிப்பது
சலித்துக்கொள்ள முடியாத
உடல்சூட்டில் தணியாத
பெண்மையின் படைப்பு

பகலில் கூட தூங்கமுடியாது
இனம்புரியாத கனவுகளை
ஏற்க மறுத்தாலும்
பருவத்தின் பிடிக்குள்
சிக்கித் தவிக்கவே செய்கிறது
மனத்தின் கெண்டைகள்

மீண்டும் ஜன்னலின்
கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே
விம்முகிறாள்…

 » Read more about: யாராவது தூண்டிலோடு வருவார்களா?  »

மரபுக் கவிதை

இயற்கை அழகு!

முத்துக்களைக் கோர்த்துவந்து
முறுவலிக்கும் பற்களென்றாய்,
கெழுத்திமீனை எடுத்துவந்து
கண்களெனக் காட்டுகின்றாய்.

முந்திரிப்பழம் கொண்டுவந்து
மூக்கென்றே வாசிக்கிறாய்,
கோவைப்பழம் எடுத்துவந்து
கூறுகிறாய் இதழென்று.

கருமுகிலைத் தாங்கிவந்து
கருங்கூந்தல் தானென்றாய்,

 » Read more about: இயற்கை அழகு!  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38

பாடல் – 38

தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை.

(இ-ள்.) தன்னை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37

பாடல் – 37

குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய
சால்பினிற் றோன்றுங் குடிமையும் – பால்போலுந்
தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடையார் வழக்கு.

(இ-ள்.) குறளையுள் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36

பாடல் – 36

ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந்
தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங்
தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர்
தாமறிவர் தாங்கண்ட வாறு.

(இ-ள்.) ஊன் உண்டு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35

பாடல் – 35

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

(இ-ள்.) முந்நீர் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34

பாடல் – 34

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் – சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார்.

(இ-ள்.) மூன்று கடன் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33

பாடல் – 33

கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ
ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும்
படைவேந்தன் பற்று விடல்.

(இ-ள்.) கோல் அஞ்சி –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33  »