பாடல் – 35

முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும்
நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை மேனிற் பவர்.

(இ-ள்.) முந்நீர் – கடலில், திரை – அலைபோல, எழுந்து (தன்மனம்) எழுந்து, இயங்கா – அலையாத, மேதையும் – அறிவுடையவனும்; நுண் – நுட்பமாகிய, நூல் – சிந்தனையினாலும், பெரும் கேள்வி – மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை – நூல்களின் முடிவை, கண்டானும் – (ஐயந்திரிபறக்) கண்டவனும்; மைந்நீர்மை – குற்றத் தன்மை, இன்றி (தன்னிடத்தில்) உண்டாகாதபடி, மயல் – மனக்கலக்கம், அறுப்பான் – ஒழித்தவனும்; இம்மூவர் – ஆகிய இம் மூவரும், மெய் நீர்மை – அழிவின்மையாகிய தன்மையுடைய, மேல் – முத்தி உலகத்தில், நிற்பவர் – நிற்பவராவர்; (எ-று.)

(க-ரை.) மெய்ப்பொருள் காணும் அறிவுடையவனுக்கும், நூல் தேர்ச்சி மிகுந்தவனுக்கும், உலகப் பற்றைவிட வல்லவனுக்கும் முத்திபெற ஏது உண்டு.

முந்நீர் – கடல் : படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யவல்ல நீர் : காரணக்குறி; இனி ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் ஆகிய மூன்று நீரும் சேர்ந்தது எனவும் கொள்ளலாம். பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. திரை : தொழிலடியாய்ப் பிறந்த பெயர். இன் : ஐந்தனுருபு, ஒப்புப்பொருள். இயங்குதல் – நடத்தல், செல்லுதல். மேதை – அறிவுடைமை, இங்குப் பண்பாகு பெயர்; அறிவுடையவனுக்காயிற்று. நுண்ணூல் – நுண்மையாகிய நூல், நூற்கரை : ஆறாம் வேற்றுமைத் தொகை. நூல்போலுதலின் : உவமையாகு பெயர். மை – காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். மேல் : பண்பாகு பெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »