பாடல் – 34

மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் – சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார்.

(இ-ள்.) மூன்று கடன் – மூவருக்குஞ் செய்யுங் கடன்களை, கழித்த – செய்து முடித்த, பார்ப்பானும் – அந்தணனும்; ஓர்ந்து – தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் (அக்குற்றத்தை) நாடி; முறைநிலை – நீதி நிலையில், கோடா – வழுவாத, அரசும் – அரசனும்; சிறை நின்று – அரசன் ஆணைக்கு அடங்கி, அலவலை – கவலைகொள்ளுதலை, இல்லா – கொண்டிராத, குடியும் – குடிகளும்; இ மூவர் – ஆகிய இம்மூவர், உலகம் – உயர்ந்தோர்; எனப் படுவார் – என்று சொல்லப்படுவார்; (எ-று.)

(க-ரை.) கடன் முறை தவறாப் பார்ப்பானும், முறைமாறா அரசனும், கவலையற்ற குடியும் உயர்ந்தோர் என்று புகழப் படுவார்.

மூன்று கடன் – தேவர் முனிவர் பிதிரர் இவர்கட்குச் செய்யுங்கடன். இவற்றில் தேவர் கடன் வேள்வியாலும், முனிவர் கடன் வேதம் ஓதலாலும், பிதிர்க்கடன் மகப்பெறுதலாலும் தீர்க்கப்படும். ஓர்ந்து : வினையெச்சம், ஓர் : பகுதி; ஆராய்; நாடு. முறை – அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறி. கோடா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்; கோடு : பகுதி, சிறை – ஆணை. குடி தாங் கருதியபடி தீயவழியிற் சென்றால், தண்டித்து அடக்கி நல்வழியிற் செலுத்திச் சிறை போலுதலால், ஆணை சிறை எனப்பட்டது. அலவலை : அல : பகுதி, அல் : தொழிற் பெயர் விகுதி. ஐ : சாரியை. மூன்று கடன் கழித்த என்பதற்கு வேதம் ஓதல், வேள்வியாற்றல், மகப்பேறு என்ற மூன்று கடன்களையும் நிறைவேற்றின எனலுமாம். சிறை நின்று என்பதற்கு அரசனால் செய்யப்பட்ட சிறைச் சாலைப்பட்டு என்பதுமாம். அரசு, குடி என்பன உயர்திணைப் பொருளாயினும், சொல்லால் அஃறிணையாதலால், பார்ப்பான் என்ற உயர்திணை ஆண்பாற் சிறப்புப்பற்றி அவை மூவர் என்ற உயர்திணை முடிபேற்றன : திணைவழுவமைதி.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »