கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »

கவிதை

வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! )

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன்
தமிழரை கலங்க வைத்தான் இன்றோ
நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் !

 » Read more about: வாலிபக் கவிஞர் வாலி  »

கவிதை

கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!

வடுகப்பட்டி ஈன்றெடுத்த வைர முத்து
வாழ்வாங்கு வாழியவே ! வாழ்வில் என்றும்,
துடிப்போடு கவியெழுதும் துள்ளல் உண்டு
துணையாகும் இவரெழுத்து துன்பம் போக்கும்,
படிக்கின்ற வரிகளெல்லாம் பாமரன் போற்றும்
பண்பாட்டின் தலையூற்றைப் பதமாய்ச் சொல்லும்,

 » Read more about: கவிப்பேரரசு வைரமுத்து வாழியவே!  »

கவிதை

அன்னையின் அடியே!

( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா )

தந்திடும் வாசம் தன்னை
தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே
உன்னிடம் கண்ட பாசம்
உணர்ந்தவன் சொல்லு வேனே
பண்னெடுங் காலம் தொட்டே
பண்பெனில் தாய்மை தானே
உன்னடி பணிதல் ஒன்றே
உண்மையில் உவகைத் தேனே!

 » Read more about: அன்னையின் அடியே!  »

கவிதை

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம்

கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!

 » Read more about: குகன் படகு பேசுகிறது!  »

கவிதை

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!

முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!

 » Read more about: முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!  »

கவிதை

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,

 » Read more about: பாட்டெழுதும் பாவலன் கை  »

கவிதை

வரதட்சணை

சுற்றமுடன் வந்தவர்கள் பெண்ணைப் பார்த்தார்
சுகமானப் பாட்டுதனைப் பாடக் கேட்டார்
கற்றிட்ட கல்வியினைப் பணியைக் கேட்டார்
கால்களினை நடக்கவிட்டே ஊனம் பார்ததார்
பெற்றவர்கள் சொத்துகளைச் சரியாக் கேட்டார்
பெயரளவில் சிற்றுண்டி சுவைத்த பின்னர்
சற்றேனும் நெஞ்சமதில் ஈர மின்றிச்
சரியாக தட்சணையை எடுத்து ரைத்தார் !

 » Read more about: வரதட்சணை  »

கவிதை

முதல் வசந்தம்!

செல்வமோ பல கோடி
செயலாற்ற பல பேர்கள்
வெல்வாரோ யாரு மிலர்
வெறுப் பாரும் உலகிலில்லை
சொற்கேட்டு நடப் பதற்குச்
சொந்தங்கள் அணி திரள்வர்!

எல்லாமே இருந் தாலும்
என்மனதில் அமைதி இல்லை!

 » Read more about: முதல் வசந்தம்!  »

கவிதை

நம்தோழர்!

(பாவகை: கலித்துறை)

மழைவளம் வேண்டி மண்ணுழவு காக்கும் விவசாயி
களைப்புடன் ஓய்ந்து கரங்களை வேற்று வேலைக்காய்
அழைப்பினை ஏற்று அவனியில் மாறிச் சென்றிடுங்கால்
உழைப்பினால் சோற்றுக் குரமிடல் இல்லா தொழிவதாகும்!

 » Read more about: நம்தோழர்!  »