கவிதை

முதுமையில் உழைப்பு

குறள் வெண்பா 10

 

ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு

முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்

தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்

பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு

உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு

தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு

தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று

தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்

சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று

அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து

 » Read more about: முதுமையில் உழைப்பு  »

புதுக் கவிதை

தனியாய்!

என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..! என் இதயப் படகு
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்! என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..!  » Read more about: தனியாய்!  »

கவிதை

கனவு நாயகன் அப்துல்கலாம்!

தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத்
தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே
ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த
உலகறியத் தலைமகனாய் வந்தவர்!

இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் –

 » Read more about: கனவு நாயகன் அப்துல்கலாம்!  »

கவிதை

தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்

மனிதா…
நீ பேராசையெனும்
தீக்குள் விரலை வைத்தால்…
உன் மனம் நொந்துபோகும்…
உன் விரல் வெந்துபோகும்!

மனிதா…
நீ காமவெறியெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மிருகமாகிடும்…

 » Read more about: தீக்குள் விரலை வைத்தால்  »

கவிதை

பள்ளிக்கூடம்

கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.

கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,

கண்சிமிட்டி பேசிய எழுத்து !

வாத்யாரின் பிறம்பை பார்த்து

பின்னுக்கு தள்ளி பயந்த காலு,

 » Read more about: பள்ளிக்கூடம்  »

கட்டுரை

என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

என்ன உலகம்? என்ன மனிதர்கள்? அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.

நல்லாதானே இருந்தார்? இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள்,

 » Read more about: என்ன உலகம்? என்ன மனிதர்கள்?  »

கவிதை

நேசிப்பாய் வாசிப்பை!

வாசிப்பை நேசிப்பாய்
வளமாக்கும் அது உன்னை!
வார்த்தைகளில் சொல்ல
வாராத இன்பத்தைத்
தருமுனக்கு வாசிப்பு!

அவரவரே அனுபவித்து
உணர்கின்ற மகிழ்ச்சி அது!
அனுபவித்துப் பார்!

 » Read more about: நேசிப்பாய் வாசிப்பை!  »

கவிதை

செய்யும் தொழிலே …

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிகள் பாடுமாம்
என் வீட்டு தறியோ என்னை கவிஞனாக்கியது!
என்னிதய ஓசைகளை காட்டிலும்
தறியின் ஓசைகளையே
நான் அதிகமாக்க் கேட்டிருக்கிறேன்!

தறிகள் ஆடும் போதுதான் எனக்குள்
காதலும் நர்த்தனம் ஆடுகின்றன …

 » Read more about: செய்யும் தொழிலே …  »

கவிதை

இரவின் ரசனை

“பகலை கதவிடிக்கில் தள்ளிவிட்டு”,

இரவின் அமைதியில்,
நெடுந்தூரமாய் மூழ்கிடவே,
ஆசைப்படுகிறேன்.
எனை அணைக்க வந்த இரவு,
என் உடலை
தட்டித் தாலாட்டுவதை
நான் உணர்ந்தேன்.

 » Read more about: இரவின் ரசனை  »

கவிதை

எது நிர்வாணம் ?

ஆதி மனிதன் உடை என்று
ஒன்றை அறிந்ததில்லை
அடுத்து வந்த மனிதன் உணர்ந்தான் அதை
மரக்கிளைகளையும் கொத்துக்களையும்
கொண்டு மறைத்தான் உடலை.

நாகரிக மனிதன் பிறந்தான்
(அ)னாகரியங்களை கண்டு
பிடித்து மகிழ்ந்தான்.

 » Read more about: எது நிர்வாணம் ?  »

By இ. சாந்தா, ago