இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 3

''நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா''

சிறுகதை

சந்தர்ப்பம்

என்னையா கேஸு? ”

“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!”

“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!”

 » Read more about: சந்தர்ப்பம்  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 2

தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் ... அவளது எழில் கொஞ்சும் மேனியழகு ... அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் ... பாருங்கள் ... '' பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும் வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் '' அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள். [ மேலும்… ]

புதுக் கவிதை

அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!

ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!! பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான் எவ்வளவு பாசம். கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா? இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!! தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள் அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக. தம்பியும் கல்வியை கையில் ஏந்தி தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

புதுக் கவிதை

செக்குச் சீமாட்டி!

 

 

 

கொக்காட்டிக் கொலுசாட்டிக்
கொஞ்சிக் கொச்சனை நீராட்டி …
கொப்பாட்டிக் குலையாட்டிக்
கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து
கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே …

 » Read more about: செக்குச் சீமாட்டி!  »

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 1

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை;

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 1  »

புதுக் கவிதை

ஞானமெது..?

இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான் .. !!

உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப் பகைக்கு
சூத்திரம் போதித்தான் ..

 » Read more about: ஞானமெது..?  »

மரபுக் கவிதை

இரயிலிருக்கை விடுதூது

காப்பு

கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து !

புதுமை

செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் !

 » Read more about: இரயிலிருக்கை விடுதூது  »