கதை

சுண்ணாம்பு

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். கோவை எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராக இருந்தது. நான் விரைந்தோடி அதில் ஏறினேன்.

ஏறிய நான், அதன் ஜன்னல் ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நொடியில் ஜிகு புகு ஜிகு புகு என்ற கூக்குரலுடன் புகையை எழுப்பி,

 » Read more about: சுண்ணாம்பு  »

கதை

வாக்குமூலங்கள்

எங்கள் பண்பாட்டிற்கு ஏற்றபடி சேலை கட்டு. உடம்பு தெரியம்படியான உடைகளை அணியாதே என்றால் 'நான் விரும்பிய உடையை உடுப்பதற்கும் உரிமையில்லையா?" என்கின்றாள். 'நீங்கள் சாரம் கட்டுகின்றீர்களே! இது எந்த சமூகத்தின் பண்பாடு" என்று குதர்க்கமாக கேட்கின்றாள். வீட்டு வேலைகளில் தனக்கு உதவுவதில்லை என்கின்றாள். எனக்கு உதவியாக இருக்கத்தானே உன்னைத் திருமணம் செய்தேன். நீ உனக்கு உதவிக்கு என்னைக்கூப்பிட்டால்? எனக்குத் தெரியாத வேலைகளை நான் எப்படிச்செய்வது? வீட்டு வேலைகளையெல்லாம் அம்மா எனக்கு பழக்கிவைக்கவில்லையே?

கதை

சிறகு தேடி…

அன்வரும் அலியும் எழுந்து தன்மீது படிந்திருந்த மண்ணை தட்டிக்கொண்டார்கள். மாலை கதிரவனின் தூரத்து ஒளி கடற்கரையை அழகு படுத்தி இருந்தது. தென்றல் என்று சொல்ல முடியாத அளவிற்கு காற்று சற்று அழுத்தமாக வீசியது. இங்கும் அங்குமாக சிதறி களைந்துக்கொண்டிருந்த ஜனங்களோடு நண்பர்கள் இருவரும் நெறுக்கமாக நடக்கிறார்கள். “அலி, நபிலா நமக்கு உறவு பெண்ணல்ல இருந்தும் நாளை நாம் பஞ்சாயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறோம். சுமூக சீர் திருத்தத்திற்காக நம்மை நாமே ஓரளவு தயார் படுத்திக் கொண்ட பிறகு ஊரில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் பஞ்சாயத்தார் நம்மை அழைக்கிறார்கள். நம் கருத்தை வெளிபடுத்த அது ஒரு வாய்ப்பாக அமைகிறது. நபிலா செஞ்சது சரின்னுதான் பஞ்சாயத்துல சொல்லப் போறேன்.”

கதை

அம்மா எனக்கொருத் தோழி

அம்மாவின் கனவுகளை மட்டுமல்ல, நினைவுகளையும் கூடப் பொய்யாக்கிவிட்டு ஓடிப்போனவன் நான். அம்மாவை இறுதியாக எப்போது பார்த்தேன். இருக்கலாம். ஓர் இருபது ஆண்டுகள் இருக்கலாம்.

என் மனத்துள் இருக்கும் அம்மா நூற் சேலையில்,

 » Read more about: அம்மா எனக்கொருத் தோழி  »

கதை

தாய்ப்பால்

திடீரென்று அவள் சொன்னாள்: ‘‘ராஜு அவன் பாட்டுக்கு முலைப்பால் குடிச்சுக்கட்டும். அதுனாலே எனக்கு உடம்பு சரியில்லேன்னு வந்தா வந்துட்டுப் போகட்டும். குருவாயூரப்பன் இஷ்டம் போல நடக்கட்டும். என்னாலே தடுக்க முடியாது!’’ ‘‘என்ன, ஜானூ! உனக்கு கிறுக்குப் புடிச்சுடுத்தா? டாக்டர் உன்னிடம் என்ன சொன்னார்? எழுந்து நடக்கவே உன்னால முடியாமப் போச்சு. கையும், காலும் இன்னும் முளைக்காத ரெண்டு குழந்தைங்க முன்னாலே இருக்கிறாங்க என்கிற கவலை கொஞ்சம் வேணும்!’’ கணவன் அவளுக்கு நினைவுறுத்தினான். மீண்டும் ஒரு பீடி எடுத்துப் பற்ற வைத்தான்.

கதை

விடுதலை

இன்று விடுதலை. சிறையை விட்டு வெளியேறப் போகிறார் சேகர்.

அடைப்பட்ட வாழ்வை 18 ஆண்டுகள் அனுபவித்து விட்டார். பெருமூச்சு உதிர்ந்தது.

அவரும் படித்தவர். பட்ட தாரி. சக நண்பர்கள் பெரிய பதவியில் இருப்பதை அறியும் பொழுது…

 » Read more about: விடுதலை  »

உருவகம்

பூவும் வேரும்

நீளமான அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் மிகப்பெரிய மரம் பரந்து விரிந்து சடைத்து வளர்ந்து நின்றது.

அனலாகக் கொதிக்கும், கடும் வெயிலில் போவோர் வருவோர்க்கெல்லாம் களைப்பாறும் தங்குமிடமாக ஒரு கற்பக விருட்சமாக அமைந்திருந்தது அந்த மரம்.

 » Read more about: பூவும் வேரும்  »

கதை

வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்

அந்தப் பிப்ரவரி மாதத்துப் பிரெஞ்ச்சு வானம் சாம்பல் நிறத்தைக் சாசுவத மாக்கிக் கொண்டிருந்தது. இரண்டு மாதகாலமாகவே இருட்டுச் சுருணைக்குள் சூரியப் பந்து சுருண்டு கொண்டது. காலை எட்டரை மணி அளவில் இரவு இருட்டு இலேசாக விளகிப் பகலிருட்டாகும்.

 » Read more about: வெள்ளை இருட்டில் ஒரு கருப்பு வெளிச்சம்  »

கதை

அன்பின் பரிசு

புதிதாக மணமான இளந்தம்பதிகள். இல்லறப் பூங்காவில் துள்ளியோடும் புள்ளிமான்கள். எந்தெந்த வழியில் இன்பம் கிடைக்கின்றதோ அதை அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இளஞ்சிட்டுகள்.

அன்றையதினம் அவர்கள் பெயருக்கு அஞ்சலொன்று வருகிறது. அதை ஆவலுடன் பிரித்துப் பார்க்கிறார்கள்.

 » Read more about: அன்பின் பரிசு  »

கதை

விதியின் விளையாட்டு

காலை நேரம். மணி ஒன்பதைத் தாண்டிவிட்டது. வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாஸ்கரன் சலிப்புடன் எழுந்தான். அவன் முகத்தில் சோகத்தின் சாயல். ஏமாற்றத்தின் பிரதிபலிப்பு. வழக்கமாக நேரத்திற்கு வரும் தபால்காரன் வரக்காணோம். நெடுநேரமாக வீட்டிற்குள் போவதும்,

 » Read more about: விதியின் விளையாட்டு  »