ஹைக்கூ ஓர் அறிமுகம் – 25

தொடர் 25. அசைபிரித்தல் ஹைக்கூ ஜப்பானில் பிறந்த ஒரு கவிதை வடிவம் என்பதையும், அதனை அங்கு மரபு மீறாமல் எழுதுகிறார்கள் எனவும், ஜப்பானிய ஒவ்வொரு எழுத்தும் ஒரு அசையெனக் கொள்ளப் படுகிறது என்றும்.. 5 – 7 – 5 என்ற அசையமைப்பில் ஜப்பானிய ஹைக்கூ எழுதப் படுகிறது என்பதையும் இதற்கு முன் கண்டுள்ளோம். தமிழில் ஹைக்கூவிற்கு அசைக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விட்டது. அசை எண்ணிக்கை வைத்து ஹைக்கூ படைக்க Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 24

தொடர் 24. ஹைக்கூவில் வார்த்தை சுருக்கம் இந்த தொடர் துவங்கிய போது வாசகர் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார். அதிகப்படியான வார்த்தைகளைக் கொண்டும் பலர் ஹைக்கூ எழுதுகிறார்களே. ஆனால் வார்த்தைச் சுருக்கமே நல்லது என்கிறீர்களே… எது சரியானது என்று. இதை இங்கு தெளிவு படுத்துவோம்.. ஜப்பானில் பிறந்த ஹைக்கூ.. முதலில் தன் பயணத்தைத் துவக்கியது மேற்கத்திய நாடுகளில் தான். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தில் இருந்தமையால்… அங்கு தான் முதலில் ஹைக்கூ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 23

தொடர் 23. சொல்லாமல் விடும் வார்த்தைகள் ஹைக்கூ கவிதைகளில் கவிஞன் சொல்லவரும் சில விசயங்களை, நேரடியாக கவிதையில் சொல்வதை விட சொல்லாமல் விடுவதும், அதனை வாசகனின் எண்ண ஓட்டத்திற்கு விட்டுவிடுவதும் பெரும்பாலும் சிறப்பாக அமையும். கவிதைகளில் அனைத்து விசயத்தையும் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. வாசகரையும் சிந்திக்கத் தூண்டுவதே ஹைக்கூ கவிதையின் சிறப்பும் ஆகும். இதை கவனியுங்கள்.. உறைந்த பனி உருமாறிக் கொண்டிருக்கிறது உருவங்கள் பலவாக..! உறைந்த பனி.. உருமாறிக் கொண்டிருக்கிறது Read more

சூரியத் தலைவர் சுந்தரக் கலைஞர் மறைந்திட வில்லையடி . .

மெரினா கடற்கரை மணலாய் நானும் மாறிட வேண்டுமடி தோழி மனதிற் கினிய அண்ணா கலைஞரை மடியில் தாங்கிடடி. விரிவான் கலைஞர் வெல்தோள் தன்னில் விழுந்திடும் துண்டாவேன் தோழி விடியல் தலைவர் மஞ்சள் துண்டென மகிழ்ச்சிச் செண்டாவேன். கலைஞர் என்னும் கருப்படு பொருளின் காலடிச் செருப்பாவேன் தோழி கண்ணியன் அமர்ந்த சக்கர நாற்காலி கைப்பிடி உறுப்பாவேன். அஞ்சுகம் முத்து வேலரின் மைந்தன் அருந்தமிழ் உருவமடி அவர் ஆற்றல் கண்டே அன்னைத் தமிழவள் Read more

இயலாமையின் ஓளி

இதோ இந்த பொழுதுதான் உன்னை அழைத்து இசை மீட்ட சொன்னது… நான் பாத்துக்கொண்டே இருக்கும் சமயத்தில்தான் நமக்கான இருளும் இசைந்து வந்தது… வழியெங்கும் விழிபதித்து உன் வருகைக்காய் என்னுடனே காத்திருந்தது இருளும் கைகோர்த்தபடியே… விழிமீன்கள் நீர்வற்றி கருவாடாய் போனபின்பு உன்வருகை அவ்விரவின் சாயலின் தோழனானது… இருளுக்கான அப்பொழுது எனைநோக்கி ஒளிவீச இயலாமையின் கரங்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்….. *மூவருமே பேச்சற்று ஏமாற்றத்தை ஆடையாக்கி விழிநோக்க நாணப்பட்டு தரைமீது ஒளிபதித்தோம்… இருளும் இயலாமையும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 22

தொடர் 22. ஹைக்கூவில் மகளிரின் பங்கு உலக இலக்கியங்கள் அனைத்திலும் மகளிருக்கான பங்களிப்பும் கணிசமாக இருந்தே வந்திருக்கிறது. பொதுவில் மகளிரைப் போலவே அவர்களின் பாடுபொருளும் மென்மையாக  இருந்தது. ஒரு காலக்கட்டத்தில்… காதல், பிரிவு, சோகம்..குடும்பம் என அவர்களுக்கான சூழல் அழகாய் கவிதைகளில் வெளியானது. பின்னர் அதுவே நாளடைவில் சற்றே விரிந்து சமுதாயச் சிந்தனைகளாயும், சாடல்களாயும் பரிணமிக்கத் துவங்கியது. ஹைக்கூவிலும் மிகப் பெரிய பங்களிப்பினை மகளிர் 1990 இல் இருந்து தமிழகத்தில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 21

தொடர் 21. ஹைக்கூவில் மகளிரின் பங்கு. தமிழ் இலக்கியத்தில் சங்க காலம் தொட்டே பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். எனினும் சொற்ப அளவிலேயே இவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் காலூன்றிய ஹைக்கூவிலும் பெண் கவிஞர்களின் பங்களிப்பு சற்று குறைவே எனினும், சிறப்பான பல கவிதைகளையும், கட்டுரைகளையும் வழங்கியிருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. 1987 ல் டாக்டர் தி.லீலாவதி என்பவர் ஜப்பானிய மொழிபெயர்ப்பு ஹைக்கூ Read more

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்! ஏழ்மையில்லாத இந்திய நாடாகத் தோன்றிட வேண்டும் சுதந்திரம்! பாலியல் தொல்லையில்லாத பாரதமாக வேண்டும் சுதந்திரம்! சுத்தமுள்ள இந்தியாவின் வாழ்க்கை சுகமாக Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20

தொடர் 20 ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ? பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்.. சமயத்தில் தொடர் அடியாக அமைய நேரிடுவதும் உண்டு. அதனை பெரும்பாலும் முற்றுப்பெற்ற அடியாக மாற்றிட முயலுங்கள். தவறும் பட்சத்தில் இருக்கட்டும். ஆனால் முதல் இரண்டு அடிகளில் முதல் அடியானது தொடர் அடியாக நீளும் போது Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 19

தொடர் 19 ஈற்றடி சிறப்பு   ஹைக்கூவில் திருப்பம் தரும் ஈற்றடியின் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.. ஈற்றடியை திருப்பமாகவோ,முரணாகவோ அமைக்கலாம். ஆனால் முதலிரண்டு அடிகளுக்கு முற்றிலும் சம்பந்தமின்றி முரண்பட்டு அமைக்க கூடாது. இதை பலமுறை வலியுறுத்துகிறோம்.. ஏனெனில் அவ்வாறு எழுதும் போது அது ஹைக்கூவின் அழகை கெடுத்து விடும். இதை கவனியுங்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கவிஞர் எழுதி நான் படித்த ஒரு கவிதை இது.. அப்பாவின் Read more