மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!

அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!

கல்வியில் சிறந்து கலைகளில்
உயர்ந்திட வேண்டும் சுதந்திம்!
கப்பலில் பயணிக்கும் மீனவர்கள்
கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்!

ஏழ்மையில்லாத இந்திய நாடாகத்
தோன்றிட வேண்டும் சுதந்திரம்!
பாலியல் தொல்லையில்லாத
பாரதமாக வேண்டும் சுதந்திரம்!

சுத்தமுள்ள இந்தியாவின் வாழ்க்கை
சுகமாக வேண்டும் சுதந்திரம்!
வறுமையொழிந்த தேசமாக விரைவில்
வல்லரசாக வேண்டும் சுதந்திரம்!