இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…
நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…
வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…
விழிமீன்கள் நீர்வற்றி
கருவாடாய் போனபின்பு
உன்வருகை அவ்விரவின்
சாயலின் தோழனானது…
இருளுக்கான அப்பொழுது
எனைநோக்கி ஒளிவீச
இயலாமையின் கரங்களை
இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்…..
*மூவருமே பேச்சற்று
ஏமாற்றத்தை ஆடையாக்கி
விழிநோக்க நாணப்பட்டு
தரைமீது ஒளிபதித்தோம்…
இருளும் இயலாமையும்
மனிதத்தை சுமந்ததினால்
தனிமையிலே யெனைவிட்டு
தயக்கத்துடன் நகர்ந்தது…
யாருமற்ற இப்போது
உனக்கான தேநீரின்
ஆவியோடு அளாவுகிறேன்
என் மரணத்தை வெல்வாயா???!!!
* மூவருமே
- நான்
- இருள்
- இயலாமை