புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்கவைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிச்சேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையாகக் காணும்பொங்கல் Read more

காலனைக் கண்டேன்!

பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப் …… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும் ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற …… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும் தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச் …… சேர்ந்தபோது காலனையே அங்குக் கண்டேன் உருவில்லாக் காட்சியாகக் கண்டேன் இன்றோ …… ஓரைந்து மணித்துளியில் நேரில் கண்டேன்! இன்றுகாலை பத்தினொன்று மணியி ருக்கும் …… இதயத்தைக் கைப்பிடியில் கசக்கித் தூக்கித் தொண்டைவழி மூளைக்கு வலிகொ டுத்துத் …… தொடர்ந்தேதும் Read more

என்ஓட்டம் என்இலக்கு

செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்         செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம் செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்         செந்தமிழே மழலைமொழி; குவிந்தி ருக்கும் செந்தமிழின் நூல்களெல்லாம் மொழிபெ யர்த்தும்         செந்தமிழில் பிறமொழிநூல் ஆக்கம் சேர்த்தும் எந்தமிழை உலகமொழி ஆக்க லொன்றே         என்இலக்கு என்ஓட்டம் முயல்வேன் செய்வேன்!   மக்களுக்காய் Read more

பிரியமான புத்தாண்டு!

பிறக்கப் போகும் புத்தாண்டு . பிரிய மான புத்தாண்டு பறந்து வந்து வானத்தில் . பரிதி யாகப் பூத்திடுமே ! சிறந்த பலன்கள் இதற்குண்டு . செப்பு கின்றாள் காதுகளைத் திறந்து வைத்துக் கேளுங்கள் . திமிராய்ச் சொல்வாள் ஆண்டுப்பெண் ! உழவர் வாழ்வில் நலம்வருமாம் . உயிரி ழப்பு குறைந்திடுமாம் புழங்கும் பணமோ செல்போனில் . புதுப்பரி மானம் கொண்டிடுமாம் முழங்கும் புயலோ இடிமழையோ . முயற்சி ஒன்றே Read more

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும் தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே நகரட்டும் விலகட்டும் மறையட்டும் சுமையெனவே துயர்தந்த எல்லாமே பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும் நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும் பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும் உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே கிழியட்டும் எரியட்டும் அழியட்டும் கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும் உன்னதத்தின் எழில்கூட்டும் Read more

கறுப்புத் துணியைக் கழற்றி எறி!

வாய்மை வெல்லும் எனச்சொல்லி ….. வழக்கு மன்ற நடுவினிலே தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில் ….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத் தூய்மை நீதி தேவதையாய்த் ….. துணிவாய் உன்னை நிற்கவைத்தார்! வாயைத் திறக்க வழியில்லை ….. வாய்..மெய் பேசும் நிலையில்லை! . பெண்மை என்றும் மென்மையெனப் ….. பெருமை பேசி சிலைவடித்தே வெண்மை நிறத்தில் உடைகொடுத்தே ….. வெள்ளை மனமாய் ஆக்கிவிட்டார்! உண்மை, நன்மை, தீமைகளை ….. உணர்ந்து பயந்தி டுவாயென்று Read more

செந்தமிழ்ச் சீர்கவி பாரதி

முண்டாசு கட்டிய பாரதியே செல்வ ……. பாரதியே முத்தமிழ் கொட்டிய அண்ட சராசரம் எங்கிலுமே கவி ……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே! சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச் ……. சிந்திட வந்துப் பிறந்தனையே! இத்தரை மக்களு மின்புற வேகவி ……. ஈன்று கொடுத்துச் சிறந்தனையே! உத்தம யோகியே ஊருக்குள் சாதியை ……. உற்ற நெருப்பில் எரித்தவனே! சித்தனே செந்தமிழ்ச் சீர்கவியே உனைச் ……. சிந்தனை தன்னில் நிறைத்தனமே! பெண்ணின் சுதந்திரம் Read more

பாரதி புகழ் வாழ்க

(கும்மி) கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள் கூடாரத் தைவிட்டு ஓடிட வே துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின் சொந்தக்கா ரக்கவி பாரதி யே! வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத் தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்! காக்கை குருவியைக் காதலித் தாய் – வீட்டைக் காத்திடும் நாயினைக் காதலித் தாய் பாக்கள னைத்தையும் காதலித் தாய் – வாழ்வைப் பாதியில்ஏ Read more

தமிழாய் வாழ்ந்த தண்டமிழ் பாரதி

ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில் —– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல் பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து —– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும் தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த —– திரைமறைவு செய்தியினை அறிந்த வ.ரா ஓங்குபுகழ் பாரதியைக் காண்ப தற்கே —– ஓரிரவு அவரிருந்த வீடு சென்றார்! மூடியுள்ள கதவுதனைத் தட்டும் போது —– முன்காப்பாய் பாபுஎன்னும் உதவி யாளன் ஓடிவந்து கதவுதனைத் திறந்து கேட்க —– Read more

கருது விளைஞ்சிருக்கு!

நெல்லும் விளைஞ்சிருக்கு நெஞ்சும் நிறைஞ்சிருக்கு! அல்லி மலருவொன்னு அங்கே பூத்திருக்கு! துள்ளும் அழகிருக்கு தூண்டில் கண்ணிருக்கு அள்ளி அணைப்பதற்கு ஆசை மிகுந்திருக்கு! வரப்பு வயலோரம் வசந்தம் அமர்ந்திருக்கு கருப்புக் குயிலுவொன்னு காத்துத் தவமிருக்கு! திரும்பும் திசையெங்கும் தீயா நினைப்பிருக்கு குறும்புப் பார்வையிலே கோலம் குடியிருக்கு! கருதும் அறுப்பதற்கு காலம் கனிஞ்சிருச்சு விருந்தும் வைக்கத்தான் வேளை நெருங்கிருச்சு! கரும்பே நாவுன்னைக் கடிச்சுத் தின்னட்டுமா! எறும்பா மாறியுந்தான் எடுத்துச் சுவைக்கட்டுமா!