பிறக்கப் போகும் புத்தாண்டு
. பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
. பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
. செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
. திமிராய்ச் சொல்வாள் ஆண்டுப்பெண் !

உழவர் வாழ்வில் நலம்வருமாம்
. உயிரி ழப்பு குறைந்திடுமாம்
புழங்கும் பணமோ செல்போனில்
. புதுப்பரி மானம் கொண்டிடுமாம்
முழங்கும் புயலோ இடிமழையோ
. முயற்சி ஒன்றே வென்றிடுமாம்
வழங்கும் இந்தப் புத்தாண்டின்
. வாய்ச்சொல் தன்னைக் கேளுங்கள் !

தமிழர் வீரம் சபைவருமாம்
. தடுக்கும் கயவர் தலைவிழுமாம்
அமிழ்தத் தண்ணீர் கிடைத்திடுமாம்
. அமைதி மக்கள் மனத்துறுமாம்
தமக்கே எல்லாம் என்பவரோ
. தள்ளப் படுவது சிறையினிலாம்
நமக்காய் வந்த புத்தாண்டின்
. நல்ல பேச்சைக் கேளுங்கள் !

செய்ய வேண்டி இருப்பவற்றைச்
. செய்து முடிக்கும் கடமைக்கும்
கையை நீட்டும் பழக்கத்தைக்
. கடைசி யாகப் பார்த்திடுவீர்
பெய்யப் போகும் புத்தாண்டில்
. பெறவே மாட்டீர் இவ்வெண்ணம் !
உய்ய வந்த புத்தாண்டின்
. உரைகள் தன்னைக் கேளுங்கள் !

இரண்டா யிரத்துப் பதினேழாம்
. இனிய மக்காள் முன்கூடித்
திரண்டு வந்து சேர்ந்திடுவோம்
. தினமும் பூக்கும் புத்தாண்டு !
வரத்துக் கெல்லாம் வரமெனவே
. வந்த திந்த ஆண்டென்றே
சிரத்தில் எண்ணிச் செயல்படுவோம்
. சிறப்பை எல்லாம் கண்டிடுவோம் !

வாசல் திறந்து வரவேற்று
. வாழ்நாள் பயனும் யாதென்று
யோசித் திங்கே அதைசெய்து
. யோகம் தன்னைப் பெற்றிடுவோம் !
மாசும் நீங்கும் மனத்திடையே
. மரியா தைகள் வளர்ந்திடுமே
வீசும் ஒளியாம் புத்தாண்டை
. விரிவாய் ஏற்போம் ! வாழ்வோமே !

-விவேக்பாரதி


1 Comment

சக்தி மகேஷ் · ஜனவரி 2, 2017 at 7 h 42 min

வருக…வருக…புத்தாண்டே….அருமையான..கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »