கழிக்கின்றோம் பழையவற்றைக்
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
வன்முறையா போகியிங்கே !

சாதிமணி உலையிலிட்டுச்
சதிவெறியாம் பாலையூற்றி
மோதிபகை வளர்வெல்லம்
மொத்தமுமாய் அதிலிட்டு
வீதிகளில் குருதிவாடை
வீசிடவே மனக்குடத்தில்
ஆதிக்கம் பொங்கவைத்தே
ஆடுவதா பொங்கலிங்கே !

காடுகளில் உழைப்பவரை
கழனிச்சேற்றில் புரள்பவரை
ஆடுகளின் மந்தையாக
அடித்தட்டில் தாழ்ந்தவராய்
மாடுகளைப் போல்விரட்டி
மனிதகுலம் தலைகுனிய
கேடுகளை விளைவிக்கும்
கேளிக்கையாகக் காணும்பொங்கல் !

தெருவெல்லாம் அன்பென்னும்
தோரணங்கள் கட்டிவைப்போம்
கரும்புசுவை மனமேற்றிக்
கனிவுதனைத் தூவிடுவோம்
அரும்மஞ்சள் முகமொளிர
அணைத்தொன்றாய்க் கூடிடுவோம்
உருவாகும் சமுத்துவத்தில்
புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம் !


1 Comment

பாவலர் கருமலைத்தமிழாழன் · ஜனவரி 14, 2017 at 15 h 52 min

ஐயா வணக்கம்,
சிறந்த முறையில் என்னுடைய கவிதையை வெளியிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »