துணிவு

சாவுக்குப்பயந்த கோழை உன்னுயிர்
துப்பாக்கியின் பின்னால்
வீர மரணத்தை விரும்பிய வீரனாக‌
நான் உன் துப்பாக்கியின் முன்னால்!!

ஒப்பனை கலைகிறேன்

நட்பும் சொந்தமும்… சிதறிப் போனது
இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம்
நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது
போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள
கடைசியாய் அழுது கொள்கிறேன்

தாயும் தாரமும்

” தாயுடன் தாரமும்
—— தக்கதோர் வாழ்வினைச்
சேயுடன் சேர்ந்ததே
—— செல்வம் தரும்வாழ்க்கை .
நோயுடன் நின்றிடில்
—— நோகாமல் சேவைசெய்யும்
தாயுடன் தாரமும்
—— தருவரே நேசத்தை .”

தாயும் தாரமும்

தாய்மைக்கென்று தனி
புகழில்லை //
விலங்கும் தாயாகும்
வியப்பில்லை //

பெண்ணுக்குத்தாய்மை
இயல்புநிலை //
தாயா தாரமா பிரிப்பது
பொருத்தமில்லை//

எதனினும் அழகிய தேசம் எனது

மதம் நம்மிடையே
விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை
நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம்.

உலகின் மிகப் பழமையான
கிரேக்கம் எகிப்து ரோமானிய
நாகரிகங்கள் எல்லாம்
சுவடேதுமின்றி காணாமல் போனாலும்
எமது சொந்த அடையாளங்கள் மட்டும்
இன்றும் நிலைத்திருக்கின்றன.

உயிர் மூச்சு உள்ளவரை

அழகான கண்ணிமைகளில் …
அழுகைப்பூ பூத்திருக்கு !…
விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் …
விண்ணிலே பூத்திருக்கு !…
தனித்த வெண்ணிலவாய் …
வெள்ளிகளின் மத்தியிலே ..
உண்ணா நோன்பிருந்து ..நீ ,
உடல் வருத்தி லாபமென்ன ?…

விழியாலே கதைசொல்லும்

அழகு மலர்

விழியாலே கதைசொல்லும் வெள்ளிநிலவே! உந்தன் மொழிசொல்லும் கவிதையுமே மெளனம்தானோ? வீணாய்ப் பழிபோடும் எண்ணத்தின் பார்வையிது, விழியில் வழிகின்ற கவர்ச்சியிலே வழிமாறும் மனமும்தான். கன்னத்தில் கைவைத்தக் காரிகையே! கவின்மலரே! அன்னத்தில் கைவைத்து அனைவருக்கும் பகிர்ந்தாயோ? உன்னிடத்தில் தளிர்க்கின்ற உயர்வான அழகாலே மன்னனுமே காத்திருப்பான் மகாராணி ஆக்குதற்கே! சடுதியிலே குளித்தபின்னும் சடைப்பின்ன நேரமிலையோ? அடுப்படியில் அனலிடையே அழகுமலர் நீயிருக்க படிப்படியாய் சமையலினைப் பாங்காக நீமுடிப்பாய், நடிப்பதுபோல் செய்தாலும் நளபாகம் உன்செயலே! பார்வையிலே பொங்கலிட்டுப் Read more

ஓர் ஊமையின் பாடல்!

செயற்கையாகிப் போன
புன்னகையைக் கண்டு
தாழ்வு உணர்ச்சிகள்
நீளுகின்றன!

விரக்தியின்
உச்சப் படியில்
நின்று கதறி
சோகமாய் முகாரி
இசைக்கிறது
என் இயலாமை!

இரட்டை மலர்

மொட்டிரண்டுப் பூத்திருக்கு முறுவலையே காட்டிருக்கு, கட்டிவெல்லக் கன்னமதில் கனிமுத்தம் நாட்டிருக்கு. சின்னஞ்சிறு பூக்களிங்கே சித்திரமாய்ச் சிரித்திருக்கு, வண்ணமலர்க் கோலமிட்டு வானமதைப் பறித்திருக்கு. பட்டுப்போன்ற மென்மையிலே பளபளப்பாய்ப் பார்த்திருக்கு, சிட்டுக்களின் புன்னகையில் செகங்கூட வேர்த்திருக்கு. அலங்காரப் பொம்மையிலே ஆனந்தச் சிலிர்ப்பிருக்கு, கலங்காத மனதையுமே கரைத்துவிடும் சிறப்பிருக்கு. இரட்டையாய் இருமலர்கள் இரம்மியமாய் மலர்ந்திருக்கு, திரட்டிவந்து இன்பமதைத் தித்திப்பாய்த் தந்திருக்கு.

காற்றாடியின் இலட்சியப் பயணம் …

உள்ளத்தில் உரத்தை ஏற்றியது
உறுதி கொண்டு விண்ணை நோக்கியது
உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது
நம்பிக்கை ஒளி கொந்துதலால்
தும்பிக்கை பலம் உந்துதலால்
எம்பி எம்பி உயர எழுந்தது
எதிர்படு இடர்களை கடந்தது
எதிர்நோக்கு உச்சியை எய்தது