மறதி

ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான். ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான். ‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’. ‘இவரை கன்ஸல்ட் செய்தால் என்ன?’ என்று நினைத்தவன்… உள்ளே நுழைந்தான். “வாங்க… உட்காருங்க”. “எனக்கு ஞாபகமறதி அதிகமா இருக்கறதா எல்லாரும் சொல்றாங்க…” என்று இழுத்தான் ராமு. “ஓ.கே.. லெட் அஸ் ஸீ… உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?” இந்த விஷயத்தில் அவனுக்கு Read more

இறைவன் சிரிக்கிறான் !

‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது.

எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்…

உறங்கும் உண்மைகள்

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள்.

மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.

பரீட்சை நேரம்…

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை. தோல்விகளை சந்திக்க விருப்பம் இல்லை… அதுதான் என்ட வழமையான பழக்கங்களை மாத்த முயற்சிக்கிறதும் இல்லை. என்னை போலவே ஒரு ஆள் முன்னால புக்கோட சண்டைபோட்டுகொண்டிருந்ததை பார்த்தன். எங்கேயோ பார்த்த கைகள் அவை.. முன்னால புக்கஸ்ட் Read more

என்மேல் விழுந்த உளி

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.

பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும்

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.

இனப் படுகொலை

சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது, துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும். விரக்தி வெருப்பு வலி சோகம் என்று எல்லாம் அவனை வாட்ட அவன் கொஞ்சம் திரும்பிப்பார்த்தான் இன்னும் சீதா அழுது கொண்டே தான் இருந்தாள்.அபலை , அவள் என்ன Read more

காத்திருத்தல்

மழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை.

சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா? என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.

தனிக்குடித்தனம்

பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள். சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள். பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டுசென்றால், Read more