புதுச் சப்பாத்து

இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன. கரைந்து போகும் பனித்துளியின் காதோரம் சேதி சொல்லி காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. சில்லென்று மேனியை மோதிக் கடக்கின்ற குளிர்ந்த காற்றின் ஈரப்பதனையும் காலைப் பொழுதின் ரம்மியமான சூழலையும் ரசிக்க முடியாதவளாய் சுற்றி Read more

இணைந்த வாழ்க்கை

நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்.. பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்.. சிறிது நேரம் நினைவில் மூழ்கினான்.. இதே கடற்கரையில் நான்கு வருடங்களுக்கு முன்பு.. மாலதி மற்றும் அவளுடைய சித்தப்பா மகனும் அருணின் நண்பனுமான திலக் , அருண் மற்றும் திலக்கின் அப்பா அம்மா சில நண்டு Read more

நூல் வெளியீட்டு விழா

ஸாகிரா டீச்சரின் உள்ளத்தில் குடியிருந்த வலியும், குழப்பமும் இன்னும் முற்றாகத் தணியவில்லை. அதிலிருந்து முழுமையாக விடுதலை பெற முயற்சிக்கிறாள். அதுவும் அவளால் முடியாமல் இருந்தது. அவளது நூல் வெளியீட்டு விழாவுக்கு இன்னும் ஒரு சில தினங்களே பாக்கி இருந்தன. அதற்குள் அவளது இல்லத்தை வந்தடைந்த ஒரு கடிதம் அவளது உள்ளத்தை மிகவும் காயப்படுத்தியது. இன்னும் எதிலும் நிம்மதியாக ஈடுபட முடியாத அளவுக்கு வேதனை அவளை ஆட்கொண்டிருந்தது. இன்னும் யார் யாருக்கு Read more

உறவுகள் அழிவதில்லை…

அப்பா … அங்கே என்ன செய்யுறீங்க ?எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க ? நேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க … சீனு டாக்டர்னா ஆயிரம் சொல்வாங்கப்பா அதுக்காக சும்மாவே இருக்க முடியுமா ?? ப்ளீஸ் ப்பா வீட்டுக்குள்ள போங்க … ரெஸ்ட் எடுங்க …மகன் பேச்சை தட்ட முடியாமல் வீட்டுக்குள் Read more

நல்லவன்

குமரேசனைக் கண்டாலே பிடிக்காது யசோதாவுக்கு. எப்படிப் பார்த்தாலும் ரெட்டை அர்த்த சினிமா பாடல்களையே முணுமுணுத்துக்கொண்டிருப்பான். “மெதுவா மெதுவா தொடலாமா? உன் மேனியிலே என் கை படலாமா?” என்று பாடுவான். “பளார்’ என ஓங்கி அறை விடலாமா?” என பதிலுக்குப் பாடத் தோன்றும். ஆனால், அடக்கிக் கொள்வாள். நிர்வாகி கூப்பிட்டார் என்று வேகமாக நடந்தால், “மெல்லப்போ, மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ…” என்று பாடுவான். பொறுக்கி. அந்த அலுவலகத்திலே அவளுக்குப் பிழத்த ஒரே Read more

பலன்

அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்தபோது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்றார் வயோதிகர். இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான். சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த Read more

இறுதி ஆசை

கற கறக்கும் லுமாலா சைக்கிள் ஆட்களை கண்டதும் முகமன் கூறி புன்னகையோடு ஒலிக்கும் இரண்டு மணிச் சத்தம், ஹம்ஸா பாய் என எல்லோர் வாயிலும் பழக்கப்பட்ட பெயர், நாட்டாமை வேலை செய்து மனைவியையும் நான்கு குமருப் பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டிருக்கும் அவரை எப்படித்தான் செலவுகளை சமாளிக்கிறீங்க என்று கேட்டால், “எல்லாம் என்ட கைலயா இருக்கு??? படச்சவனுக்கு தெரியாதா யார எப்படி கவனிக்கனும்னு, அவன் பாத்துக்குவான்” என்று புன்னகை பூத்தபடியே சொல்லும் ஹம்ஸா Read more

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள். என்ன செய்வது என்றே தெரியவில்லை.” அவன் சொன்னதிலிருந்தே இளைஞனுடைய பிரச்னை என்னவென்று குருவுக்குத் தெரிந்துவிட்டது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார். ஒரு ஊருக்கு வெளியே மரத்தடில பெரியவங்கலாம் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. Read more

தாடி ஏன்?

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான். ‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ். ‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…’ என்றான் அன்வர். ‘ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்… நான் அப்பறமா கால் பண்றேன்’ என்று Read more

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம். முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…” அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும். இந்த வீட்டுக்கு குடிவந்து இரண்டுவருடமாக பிச்சைமுத்துவிடம் அவ்வளவாக பேசியதில்லை.. கிராமங்களில் புதியஆட்கள் தலைத்தெரிந்தாலே கடைசிதெருக்கோடிவரை தெரிந்துவிடும். கேட்காமலே நலம்விசாரிப்பு என்றபெயரில் புதுஆட்களின் விவரங்கள் தெரிந்துக்கொள்வார்கள். தேவையான உதவிகளும் கேட்காமலே செய்துதருவது கிராமத்து Read more