நட்பைத் தேடி

மூன்றெழுத்து சொர்க்கமிது, முக்கனிகளின் சுவைபோல. உதடுகளால் உரையாடாது. உள்ளத்தால் ஒன்றி நிற்கும். துன்பத்தில் துணையாய் நிற்கும். துயர்நீக்கும் கோலினைபோன்று. இனிக்கும் பொழுதுகள் தோறும் இதயத்தை இறுக்கி அணைக்கும். வலப்பக்கம் காயமென்றால்,- இடப் பக்கமும் சேர்ந்தழும் இரு கண்களாக, சரியான சொல்லுக்குக் காத்திருக்கும் செரிவானப் பதிப்பாக. எல்லோருக்கும் உண்டானதுதான் எல்லாவற்றிலும் பின் நிற்கின்றது. அறிவானத் தேடலில் கிடைபார்கள், அழகு முத்துக்களாய் நண்பர்கள். கை நீட்டும் கணநேரம், கரம் கோர்க்கும் நட்புகளால் வாழ்தல் Read more

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம். முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…” அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும். இந்த வீட்டுக்கு குடிவந்து இரண்டுவருடமாக பிச்சைமுத்துவிடம் அவ்வளவாக பேசியதில்லை.. கிராமங்களில் புதியஆட்கள் தலைத்தெரிந்தாலே கடைசிதெருக்கோடிவரை தெரிந்துவிடும். கேட்காமலே நலம்விசாரிப்பு என்றபெயரில் புதுஆட்களின் விவரங்கள் தெரிந்துக்கொள்வார்கள். தேவையான உதவிகளும் கேட்காமலே செய்துதருவது கிராமத்து Read more

உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை. பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்.. மதியம் பெரும்பாலும் பழையசாதம். ஊறுகாய்மட்டைக்கு ரெண்டு பைசா. இதுதான் லஞ்ச்.. எப்போதோ இட்லி. சக தோழர்களும் நடுத்தரவசதிதான் என்னைபோல. தோழர்கள் பிட்சா பர்கர் போல அதிசயமாய் பிய்த்துக்கொள்வார்கள். அவர்கள் கொண்டுவரும் பழையது எப்போதும் போல் எனக்கு.. எட்டாம்வகுப்புவரை அப்பள்ளியில் Read more