மூன்றெழுத்து சொர்க்கமிது,
முக்கனிகளின் சுவைபோல.
உதடுகளால் உரையாடாது.
உள்ளத்தால் ஒன்றி நிற்கும்.

துன்பத்தில் துணையாய் நிற்கும்.
துயர்நீக்கும் கோலினைபோன்று.
இனிக்கும் பொழுதுகள் தோறும்
இதயத்தை இறுக்கி அணைக்கும்.

வலப்பக்கம் காயமென்றால்,- இடப்
பக்கமும் சேர்ந்தழும் இரு கண்களாக,
சரியான சொல்லுக்குக் காத்திருக்கும்
செரிவானப் பதிப்பாக.

எல்லோருக்கும் உண்டானதுதான்
எல்லாவற்றிலும் பின் நிற்கின்றது.
அறிவானத் தேடலில் கிடைபார்கள்,
அழகு முத்துக்களாய் நண்பர்கள்.

கை நீட்டும் கணநேரம்,
கரம் கோர்க்கும் நட்புகளால்
வாழ்தல் இனிக்கும்
வாழ்க்கை சிறக்கும்….