திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47

பாடல் – 47 சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும் காப்பிகழல் ஆகாப் பொருள். (இ-ள்.) சில்சொல் – மெல்லிய சொல்லையும், பெரும்தோள் – பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் – பெண்டிரும்; பல்வகையும் – பலவகையாலும், தாளினால் – முயற்சியினால், தந்த – தேடிய, விழுநிதியும் – சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் – எப்பொழுதும், நா – நாக்கு, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46

பாடல் – 46 கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (இ-ள்.) கால் – நடையில், தூய்மை – தூயது ஆகுந் தன்மை, இல்லா – இல்லாத, கலிமாவும் – குதிரையும், காழ் – கட்டுத்தறியை, கடிந்து – முறித்து, மேல்தூய்மை – (வீரனிருப்பதற்கேற்ற) மேலிடம் தூயதாம் தன்மை, இல்லாத – உடையதாயிராத, வெங்களிறும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45

பாடல் – 45 ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (இ-ள்.) ஆற்றானை – (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று – செய் என்று ஏவி. அலைப்பானும் – வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு – தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ – (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44

பாடல் – 44 விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. (இ-ள்.) விருந்து இன்றி – விருந்தினரை இல்லாமல், உண்ட – தனித்து உண்ணக் கழிந்த, பகலும் – பகற்பொழுதும், திருந்து இழையார் – திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல – பொருந்துவதால், புடை பெயரா – கழிதல் இல்லாத, கங்குலும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43

பாடல் – 43 வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். (இ-ள்.) வாயின் அடங்குதல் – தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் – இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை – உடலின் செய்கை, அடங்கல் – அடங்குதலால், மாசு அற்ற – குற்றம் அற்ற, திப்பியம் ஆம் – (மறுமையில்) தெய்வப் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42

பாடல் – 42 கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (இ-ள்.) கழகத்தால் – சூதாட்டத்தினால், வந்த – கிடைத்த பொருள் – பொருளை, காமுறாமை – விரும்பாமையும்; பழகினும் – (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை – பிராமணரை, தீப்போல் – தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் – அஞ்சி நடத்தலும்; உழவின் கண் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41

பாடல் – 41 அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) அலந்தார்க்கு – (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று – (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் – ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் – (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை – தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40

பாடல் – 40 வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட் கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந் தொல்லறி வாளர் தொழில். (இ-ள்.) வெகுளி – (தம் இடத்து எழுந்த) சினத்தை, நுணுக்கும் – சுருங்கச் செய்யும், விறலும் – வலிமையும்; மகளீர்கட்கு – பெண்கட்கு, ஒத்த – இசைந்த, ஒழுக்கம் – நடையை, உடைமையும் – உடையரா யிருத்தலும்; பாத்து உண்ணும் – பகுத்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39

பாடல் – 39 புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும் நன்மையி லாளர் தொழில். (இ-ள்.) புலை – இழி தன்மையாடு, மயக்கம் – கலத்தலாவது, பொருட் பெண்டீர் – பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி – விரும்பி, தோய்தல் – கூடுதலாம்; கலம் மயக்கம் – பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு – Read more

காலந்தோறும் கவிதை

கதையென்பது ஓர் உணர்வுப் பரிமாற்றம். தனக்கேற்றபட்ட சுய அனுபவங்களை, தாக்கங்களை ஏனையவர்களோடும் பகிர்ந்து கொள்ள எடுக்கும் முயற்சியே கவிதை. கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு என்று கூறினோம். ஆம். கவிதை, செய்யுள் என்பவை மன்னர் காலத்தில் மன்னர்களால் புகழப்பட்டது. அதாவது புலவர்கள், கவிஞர்கள் அரசவையிலே அரசனை, நாட்டினை புகழ்ந்து பாடினார்கள். பரிசுகள் பெற்றார்கள். விதிவிலக்குக்காக வெறும் புகழ்ச்சிகாக மன்னர்களைப் பாடாத புலவர்களும் இருந்தார்கள். இதேவேளை புரவலர்கள் பலர் புலவர்களை வாழ Read more