பாடல் – 44

விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார்
புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்
றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே யுரனுடை யார்க்கு.

(இ-ள்.) விருந்து இன்றி – விருந்தினரை இல்லாமல், உண்ட – தனித்து உண்ணக் கழிந்த, பகலும் – பகற்பொழுதும், திருந்து இழையார் – திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல – பொருந்துவதால், புடை பெயரா – கழிதல் இல்லாத, கங்குலும் – இரவும்; இல்லார்க்கு – வறியவர்க்கு, ஒன்று – ஒன்றை, ஈயாது – கொடாமையினால், ஒழிந்து அகன்ற – கழிந்த, காலையும் – நாளும்; இ மூன்றும் – ஆகிய இம் மூன்றும், உரன் உடையார்க்கு – அறிவுடையார்க்கு, நோயே – (நினைக்குந்தோறும்) நோய்களாம்; (எ-று.)

(க-ரை.) விருந்தில்லாப் பகலும், மனைவியில்லா இரவும், வறிஞர்க் கீயாக் காலைவேளையும் அறிவுடையோர்க்கு நோய் செய்வன.

பகல் : தொழிலாகுபெயர். ஈயாது : வினையெச்சம். ஒழிந்து அகன்ற : ஒரு பொருட் பன்மொழி. நோயைத் தருபவற்றை நோய் என்றது காரணத்தைக் காரியமாகக் கூறுவதோர் உபசார வழக்கு. உரன்; உரம் என்பதன் போலி. உடையார் : உடைமை என்னும் பண்படியாகப் பிறந்த குறிப்பு வினையாலணையும் பெயர் திருந்திழையார் என்பதற்கு மேற்பொருளின்றி, திருந்து என்பதை இழைக்கு அடையாகக் கொள்ளாது பொருள் சிறப்புக்கருதி இழையார் என்பதற்கு அடையாகக் கொள்வதும் ஆம். இழை – அணி : தொழிலாகுபெயர்

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »