திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 51

பாடல் – 51 தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர் தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். (இ-ள்.) தூர்ந்து – (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் – (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் – உறவாவோர், துணைகளே – உறவினரே யாவர்; சார்ந்து – கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் – நடந்தவிடத்தும், சலவர் – பகைவர், சலவரே – பகைவரே; இன்னா Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 50

பாடல் – 50 கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளும் இம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (இ-ள்.) கொள்பொருள் – தான் கொள்ளுதற்குரிய பொருளை, வெஃகி – விரும்பி, குடி அலைக்கும் – குடிகளை வருத்துகின்ற, வேந்தனும் – அரசனும்; உள்பொருள் – உண்மை நிகழ்ச்சியை, சொல்லா – சொல்லாமல், சலம் மொழி – பொய் சொல்லுகின்ற, மாந்தரும் – மனிதரும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 49

பாடல் – 49 ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் – பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (இ-ள்.) ஏவு – (பெற்றோரால்) ஏவப்பட்ட, ஆதும் – எந்தக் காரியத்தையும், மாற்றும் – தன்னால் முடியாதென மறுக்கின்ற, இளங்கிளையும் – புதல்வனும்; காவாது – மனைவியைக் காவாமல், வைது – திட்டி, எள்ளி – இகழ்ந்து, சொல்லும் – பேசுகின்ற, தலைமகனும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 48

பாடல் – 48 வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் – ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானும் இம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (இ-ள்.) வைததனை – ஒருவன் வைததை, இன் சொல் ஆ – இனிய சொல்லாக, கொள்வானும் – கொள்கின்றவனும், நெய்பெய்த – நெய் வார்த்த, சோறு என்று – சோறு இது ஆம் என்று, கூழை மதிப்பானும் – கூழை மதிக்கின்றவனும், கைப்பு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 47

பாடல் – 47 சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையுந் தாளினால் தந்த விழுநிதியும் – நாடோறும் நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இம்மூன்றும் காப்பிகழல் ஆகாப் பொருள். (இ-ள்.) சில்சொல் – மெல்லிய சொல்லையும், பெரும்தோள் – பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் – பெண்டிரும்; பல்வகையும் – பலவகையாலும், தாளினால் – முயற்சியினால், தந்த – தேடிய, விழுநிதியும் – சிறப்பாகிய பொருளும், நாள்தோறும் – எப்பொழுதும், நா – நாக்கு, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 46

பாடல் – 46 கல்தூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேல்தூய்மை யில்லாத வெங்களிறுஞ் – சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும் குறுகார் அறிவுடை யார். (இ-ள்.) கால் – நடையில், தூய்மை – தூயது ஆகுந் தன்மை, இல்லா – இல்லாத, கலிமாவும் – குதிரையும், காழ் – கட்டுத்தறியை, கடிந்து – முறித்து, மேல்தூய்மை – (வீரனிருப்பதற்கேற்ற) மேலிடம் தூயதாம் தன்மை, இல்லாத – உடையதாயிராத, வெங்களிறும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 45

பாடல் – 45 ஆற்றானை யாற்றென் றலைப்பானும் அன்பின்றி யேற்றார்க் கியைவ கரப்பானும் – கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (இ-ள்.) ஆற்றானை – (தான் குறித்த தொழிலை) செய்யத் திறமையற்ற ஏவாலளனை, ஆற்று என்று – செய் என்று ஏவி. அலைப்பானும் – வருத்துகின்றவனும்; ஏற்றார்க்கு – தன்னிடத்தில் வந்து இரந்தவர்க்கு, இயைவ – (கொடுப்பதற்கு) இசையும் பொருளை, அன்பு இன்றி – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 44

பாடல் – 44 விருந்தின்றி யுண்ட பகலுந் திருத்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் – இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. (இ-ள்.) விருந்து இன்றி – விருந்தினரை இல்லாமல், உண்ட – தனித்து உண்ணக் கழிந்த, பகலும் – பகற்பொழுதும், திருந்து இழையார் – திருந்திய அணிகளை அணிந்த மனைவியரை, புல்ல – பொருந்துவதால், புடை பெயரா – கழிதல் இல்லாத, கங்குலும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 43

பாடல் – 43 வாயின் அடங்குதல் துப்புரவாம் மாசற்ற செய்கை யடங்குதல் திப்பியமாம் . பெய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகும் இம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். (இ-ள்.) வாயின் அடங்குதல் – தீவழிச் செல்லாமல் காக்குதலால், துப்புரவு ஆம் – இப்பிறப்பில் அனுபவிக்கப்படும் செல்வம் உண்டாகும்; செய்கை – உடலின் செய்கை, அடங்கல் – அடங்குதலால், மாசு அற்ற – குற்றம் அற்ற, திப்பியம் ஆம் – (மறுமையில்) தெய்வப் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 42

பாடல் – 42 கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தல்இம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (இ-ள்.) கழகத்தால் – சூதாட்டத்தினால், வந்த – கிடைத்த பொருள் – பொருளை, காமுறாமை – விரும்பாமையும்; பழகினும் – (பலநாள்) பழகினாலும், பார்ப்பாரை – பிராமணரை, தீப்போல் – தீக்கு அஞ்சி நடப்பதுபோல், ஒழுகல் – அஞ்சி நடத்தலும்; உழவின் கண் Read more