பாடல் – 51

தூர்ந்தொழுகிக் கண்ணும் துணைகள் துணைகளே
சார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் சலவரே
ஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.

(இ-ள்.) தூர்ந்து – (பொருள்வருவாய்) அடைபட்டு ஒழுகிக் கண்ணும் – (இல்லாமல்) வாழுமிடத்தும், துணைகள் – உறவாவோர், துணைகளே – உறவினரே யாவர்; சார்ந்து – கருத்துக்கு இணங்கி, ஒழுகிக் கண்ணும் – நடந்தவிடத்தும், சலவர் – பகைவர், சலவரே – பகைவரே; இன்னா – துன்பஞ் செய்யுங் குணமுள்ள, கயவர் – கீழ்மக்கள், ஈர்ந்த – பிளக்கப்பட்ட கல் – கல்லை ஒப்பாவார்; இவர் மூவர் – இவர் மூவரும், தேர்ந்தக்கால் – (அறிவுடையோர்) ஆராயுமிடத்து; தோன்றும் – வெளிப்படும், பொருள் – பொருள்களாவார்; (எ-று.)

(க-ரை.) வறுமைக் காலத்தும் உறவினர்களே உதவி புரிபவர்; எவ்வளவு நெருங்கிப் பழகினும் பகைவர் பகைவரே,கற்பிளப்பைப்போல் என்றும் ஒன்று கூடாதவர் அற்பர்; இவர்கள் தன்மை ஆராய்ந்து சொல்லப்பட வேண்டுபவை.

ஒழுகியக்கண் என்பதில் அகரம் தொக்கு ஒழுகிக் கண் என்று வந்தது; கண் : ஈற்று வினையெச்சம். தேர்ந்தக்கால் : இது கால் ஈற்று வினையெச்சம். உம் இரண்டும் இறந்தது தழீஇயதனோடு உயர்வு சிறப்பில் வந்தன. ஏ இரண்டும் தேற்றம் – துணை : பண்பாகு பெயர். கல், பொருள் : இரண்டும் உவமையாகு பெயர்கள். தேர்ந்தக்கால் தோன்றும் பொருள். எனவே, தேராவிடத்து இத்தன்மையது எனத் தோன்றாப் பொருளாவார்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்

 

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »