தம்பி… 6

தொடர் எண் 6. தலைப்பு : வீரம் வாழ்த்திடவே சாதனைகள் வாழ்நாளில் சாதிப்பாய் ஏழ்மையினை வெற்றிகொள் ஏறுபோல்நீ வீரம்கொள் ஆழ்கடலில் விட்டாலும் அஞ்சாமல் வந்துவிடு வீழ்த்துகின்ற எண்ணத்தை வீறுகொண்டு மாற்றிவிடு. மாற்றிக்கொள் காலத்தின் மாற்றங்கள் நோக்கிடுவாய் ஏற்றுக்கொள் வீரத்தை ஏணியாக்கி வாழ்க்கையினில் வேற்றுமைகள் நீக்கிடவும் வெற்றிகளைப் பற்றிடவும் போற்றிடவும் உற்றாரும் பொங்கிநீயும் நிற்பாயே. நிற்பாயே குன்றாக நேர்மையாக வாழ்ந்திடவே வெற்பாக நீயிருந்தால் வித்தாக மாறிடலாம் கற்றவழி சென்றிடலாம் கண்ணியமும் காத்திடலாம் சுற்றத்தார் மேகமாக சூழ்ந்திடவும் Read more

தம்பி… 5

தொடர் எண் 5. தலைப்பு : நட்பு. கொள்வாயே நண்பர்கள் குன்றாத பண்புடனே உள்ளங்கள் ஒன்றாக ஊர்போற்றும் நட்பினையே பள்ளங்கள் மேட்டினிலும் பற்றுடனே எந்நாளும் தள்ளாத மூப்பினிலும் தாங்குகின்ற ஊன்றுகோலாய். ஊன்றுகோலாய் வாழ்க்கையினில் ஒன்றுபட்டு நிற்பீரே சான்றோராய் நின்றொளிர்க சாதனைகள் செய்திடவே தோன்றுகின்ற துன்பங்கள் தோல்விகளைத் தந்திடினும் தேன்போன்றத் தன்மையுடன் தென்றலாக மென்மைபெற்றே. மென்மையுடன் பேசிட்டால் மேன்மைகளும் பெற்றிடலாம் நன்மைகளும் கிட்டிடவே நட்பினிலே மேம்படுவாய் பொன்னாக எண்ணிடுவாய் போற்றுகின்ற பெரியோர்சொல் ஒன்றுபடு சாதிப்பாய் Read more

தம்பி… 4

தொடர் எண் 4. தலைப்பு : ஏமாறாதே. மாறாத எண்ணத்தில் மாற்றங்கள் வந்தாலும் கூறாதே பொய்களையும் கொள்வாயே வாய்மையினை ஆறாதே சுட்டவடு ஆற்றுவாய் நற்பணிகள் மீறாதே மூத்தோர்சொல் மேன்மையுற ஏற்பாயே. ஏற்பாயே நற்பணிகள் எல்லோரும் ஏற்றமுற ஆற்றுவாயே இன்முகமாய் அல்லல்கள் நீங்கிடவே ஊற்றாக செல்வங்கள் ஊருணியாய் மக்களுக்கு சீற்றமுடன் வாழாமல் சிந்தனைகள் கூடிடுமே. கூடிவாழ நற்பயன்கள் கோடியுண்டு மாற்றமில்லை நாடிவரும் ஏழைகட்கு நல்லுணவைத் தந்துதவு தேடிவரும் திக்கற்றோர் தீர்ப்பாயே துன்பங்கள் ஓடிவரும் ஆறாக ஊராரும் வாழ்த்திடவே Read more

அனுபவம்

வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம்
வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை…
ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்…

இப்படி எத்தனை காலம்தான்
ஏமாறப் போகின்றோமோ…

சிந்தனை செய்யும் சக்தி இருந்தும்
அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்..
கொஞ்சம் அதிகம்தான்…

தம்பி… 3

தொடர் எண் 3 தலைப்பு : தம்பி நலமா ? உன்திறனே உன்வாழ்வை உன்னதமாய் சீர்படுத்தும் என்றேதான் நெஞ்சினிலே இன்றேதான் கொள்வாயே நன்றேதான் நம்மனத்தில் நல்லெண்ணம் வேண்டுமப்பா ஒன்றேதான் ஊராக ஓங்கட்டும் நம்வாழ்வே. வாழ்வினிலே ஏற்றமுற வாழ்ந்திடுவாய் அன்பாக ஏழ்மையிலே வாடினாலும் ஏற்றமுற நம்பிக்கை ஆழ்மனத்தில் கொள்வாயே அன்பொன்றே தீர்வாகும் தாழ்மையுடன் சான்றோரின் தக்கவழி ஏற்பாயே. ஏற்பாயே நல்லுரையை எல்லோரும் கேளிரென சொற்படியே செய்திடுவாய் சொல்லாண்டு வென்றிடுவாய் பற்றிடுவாய்ப் பாசத்தில் பண்புகளில் Read more

தம்பி… 2

குன்றாக நின்றிடவே கோலேச்சி வாழ்வாயே
நின்றாடும் சொக்கனவன் நின்வேண்டல் கேட்டருள்வான்
சென்றிடுவாய் திக்கெட்டும் சேர்த்திடுவாய் ஞானத்தை
பொன்பொருளும் சேர்ப்பாயே பூக்கட்டும் உன்திறனே.

தம்பி… 1

திரும்பித்தான் பார்த்திடுவாய் தீர்வுகளைக் கண்டிடுவாய்
இரும்பாக நெஞ்சத்தில் ஏற்றித்தான் வைத்திடுவாய்
கரும்பாகப் பேசிடுவாய் காந்தமாக ஈர்த்திடுவாய்
துரும்பாக எண்ணாமல் தூணாகத் தாங்குவாயே.

தம்பி… அறிமுகம்

பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.

காதல் சங்கீதமே

உச்சந்தலை வருடி உரசும் காற்றில் அருகினில் வந்து உரையாடி உறவாகி வெட்கம் பூசி முகமது சிவக்க வில்லாய் வலைக் கரம் வளைத்து, பிறைநுதல் தொட்டு திலகம் தீட்டி விரல் தீண்ட விரதமும் தீரும்! சுவாசக் காற்றே தேவை இல்லை மூச்சாய் என்னை சுமக்கும் அன்பே… மனம் தொடும் காதல் சங்கீதமாய் இயல் இசையை என்னுள் மீட்டுகிறாய்நீ !  

வள்ளுவர் குறளும், வாரியார் வாக்கும்!

எனது இளமைக்காலங்களில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவுகளை விரும்பிக் கேட்பதுண்டு. அவரது அழகியப் பேச்சும் பேச்சின் செறிவும் எனக்குப் பிடிக்கும். அப்படியான என் மனம் கவர்ந்த வாரியார் வாக்கும் வள்ளுவர் குறளும் என்னை வியப்பிலாழ்த்தி நூலைப் படிக்க வைத்தது. நூலின் தலைப்பிற்கேற்ப பொருத்தமான விளக்கங்களை சுவைபட விவரித்து வியக்கத்தக்க அளவுக்கு மிக சிறப்பாக வாரியாரின் சொற்பொழிவு நீதிகதைகளை பொருத்தமாக இணைத்துக் குறளுக்கு மிகப்பொருத்தமான விளக்கத்தையும் சுவைபட மிக சுருக்கமாக Read more